கொவிட்-19க்கு எதிரான போரில் உச்ச செயல்வீரர்கள்: சிறந்த தொண்டுக்கு விருது

கொவிட்-19க்கு எதிரான போரில் உச்ச செயல்வீரர்கள்: சிறந்த தொண்டுக்கு விருது

2 mins read
77842fd5-fc86-47a5-a2a5-3e418cffc137
தரமிக்க சிங்கப்பூர் சுகாதாரச் சேவை உச்ச செயல்வீரர் விருது பெற்ற வர்களில் டாக்டர் எட்வின் லோ செங் டியும் (இடது), டாக்டர் ஷான் ஜெரால்டு நாதனும் அடங்குவர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

கொவிட்-19க்கு எதி­ரான போராட்­டத்­தில் தன்­ன­லம் பாரா­மல் பொது­ந­லத்தை முன்­னி­றுத்தி சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை ஊழி­யர்­கள் அரும்­பா­டு­பட்டு இருக்­கி­றார்­கள் என்று சுகா­தார அமைச்­சர் கான் கிம் யோங் பாராட்­டி­னார்.

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை­களில் பணி­யாற்­றும் பல பட்­டத்­தொ­ழி­லர்­களும் வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­களில் பணி­களில் அமர்த்­தப்­பட்­ட­னர். பரி­சோ­த­னைக் கூடங்­களில் பிரித்­து­வி­டப்­பட்­ட­னர். இதர துறை­க­ளி­லும் அவர்­கள் பொறுப்­பு­களை மேற்­கொண்­ட­தாக அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

"கடந்த ஆண்­டில் நம்­மு­டைய பய­ணம் எளி­தா­ன­தாக இல்லை. இருந்­தா­லும் மீள்­தி­ற­னு­டன் நாம் தொடர்ந்து இருந்து வரு­கி­றோம்.

"ஒன்­றா­கச் சேர்ந்து பல சவால்­களைச் சமா­ளித்து இன்­றைய நிலையை எட்டி இருக்­கி­றோம்," என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

'தர­மிக்க சிங்­கப்­பூர் சுகா­தா­ரச் சேவை விரு­து­கள்' வழங்­கும் நிகழ்ச்சி நேற்று நடந்­தது. 11வது ஆண்­டாக நடந்த அந்த நிகழ்ச்­சி­யில் ஏறத்­தாழ 7,000 சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை பட்­டத்­தொ­ழி­லர்­களும் 38 அர­சாங்க, தனி­யார் நிறு­வ­னங்­கள், சமூக மருத்­து­வ­மனை­கள், சமூ­கப் பரா­ம­ரிப்­புத் துறை­யைச் சேர்ந்த அமைப்­பு­கள் ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த பங்­கா­ளி­களும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு சிறப்­பிக்­கப்­பட்­ட­னர். 17 பேருக்கு உச்ச செயல்வீரர்கள் விருது வழங்­கிச் சிறப்­பிக்­கப்­பட்­டது.

நிகழ்ச்­சி­யில் உரை­யாற்­றிய அமைச்­சர், சிங்­கப்­பூர் சார்­பி­லும் அமைச்­சின் சார்­பி­லும் சுகா­தா­ரத் துறையினர் அனை­வருக்­கும் நன்றி தெரி­வித்­துக்­கொண்­டார்.

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை ஆற்­ற­லைப் பலப்­ப­டுத்த தொடர்ந்து முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­படும் என்­றும் தேர்ச்சிப் பயிற்­சி­யி­லும் வேலை மறு­வ­டி­வ­மைப்­பி­லும் முத­லீடு செய்­யப்­படும் என்­றும் அமைச்­சர் உறுதி கூறி­னார்.

இத­னி­டையே, உச்ச செயல்வீரர் கள் விருது பெற்­ற­வர்­களில் 61 வயது டாக்­டர் எட்­வின் லோ செங் டியும் ஒரு­வர். சிங்­ஹெல்த் குழு­மத்­தின் வட்­டார சுகா­தா­ரத் துறை இயக்­கு­ந­ராக பதவி வகித்த இவர், சென்ற ஆண்­டில் ஓய்வு பெற்று குடும்­பத்­தா­ரு­டன் மகிழ்ச்­சி­யு­டன் ஓய்வு கழிக்க இருந்த நிலை­யில், கொவிட்-19க்கு எதி­ரான போராட்­டத்­தில் முக்­கிய பொறுப்பை ஏற்கும் படி அழைப்பு வந்­தது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அதை தயங்­கா­மல் ஏற்­றுக்­கொண்ட இந்த மருத்­து­வர், போர்க்­க­ளத்­தைப் போன்று பல பணி­களை வேக­மாக கவ­னிக்க வேண்டி இருந்­தது.

வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­விடு­தி­கள் உட்­பட பல­வற்­றி­லும் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் கூட இவர் பணி­யாற்­றி­னார். ஏறத்­தாழ 30 வாட்ஸ்­அப் குழுக்­களில் ஈடு­பட்டு பல்­வேறு தக­வல்­க­ளை­யும் இவர் பகிர்ந்து வந்­தார்.

விரு­து­பெற்ற மற்­றொ­ரு­வ­ரான டாக்­டர் ஷான் ஜெரால்டு நாதன், 32, செயின்ட் ஆண்ட்­ரூஸ் சமூக மருத்­து­வ­ம­னை­யைச் சேர்ந்­த­வர். இவர் தாதிமை இல்­லங்­களில் பெருந்­தொண்­டாற்­றி­னார்.

"கொவிட்-19 தொற்­றின்­போது சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை ஊழி­யர்­கள் அனை­வ­ருமே செயல்வீரர் களைப் போலவே சேவை­யாற்றி­னார்­கள்," என்றார் டாக்­டர் நாதன்.