முன்னாள் நிறுவனர் மீது மேலும் பல குற்றச்சாட்டுகள்

முன்னாள் நிறுவனர் மீது மேலும் பல குற்றச்சாட்டுகள்

1 mins read
2bf31c2b-43a8-4589-9b21-f4d9c09e92be
-

ஹின் லியோங் டிரே­டிங் என்ற நிறு­வ­னத்தை நிறு­விய முன்­னாள் எண்­ணெய்த் துறை தொழி­ல­தி­பர் லிம் ஊன் குயின், 78, மீது மோசடி தொடர்­பி­லான மேலும் 23 குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக அரசு தரப்பு வழக்­க­றி­ஞர்­கள் நேற்று நீதி­மன்­றத்­தில் தெரி­வித்­த­னர்.

ஏப்­ரல் 8ஆம் தேதி புதிய குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. உடல்­நிலை சரி­யில்லை என திரு லிம் தெரி வித்­த­தால், அவரி­ட­மி­ருந்து வாக்கு­மூ­லத்தை முழு­மை­யாக பதிய முடி­ய­வில்லை. அதனால் நேற்று புதிய குற்­றச்­சாட்­டு­களைச் சுமத்த முடி­ய­வில்லை என்று கூறப்பட்டது.