$1 மில்லியன் வீவக மறுவிற்பனை வீடுகள் ஏறுமுகம்: கொவிட் காலத்தில்கூட அதிகம் கைமாறின

சிங்­கப்­பூ­ரில் மில்­லி­யன் வெள்­ளிக்­கும் அதிக விலை­யுள்ள வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக மறு­விற்­பனை அடுக்­கு­மாடி வீடு­கள் அண்­மை­யில் பிர­ப­ல­மாகி வரு­கின்­றன.

கொவிட்-19 தொற்று காலத்திலும்­ கூட 2020ல் குறைந்­த­பட்­சம் $1 மில்­லி­யன் விலை­யுள்ள மொத்­தம் 82 வீவக மறு­விற்­பனை வீடு­கள் கைமாறி இருக்­கின்­றன. 2019ல் இவற்­றின் எண்­ணிக்கை 64 ஆக இருந்­தது.

குவீன்ஸ்­ட­வு­னில் மெய் லிங் ஸ்திரீட்­டில் உள்ள புளோக் 149ல் இருக்­கும் 150 சதுர மீட்­டர் பரப்­ப­ள­வுள்ள எக்­சி­கி­யூட்­டிவ் அடுக்­கு­மாடி வீடு­தான் 2012 ஜூலை­யில் கை மாறிய முதல் மில்­லி­யன் வெள்ளி வீடு என்று தெரிகிறது.

அதற்கு மூன்று மாதங்­கள் கழித்து, பீஷான் ஸ்திரீட் 13ல் இருக்­கும் 194வது புளோக்­கில் அமைந்­துள்ள 163 சதுர மீட்­டர் பரப்­பளவுள்ள அடுக்­கு­மாடி வீடு, 2012 அக்­டோ­ப­ரில் $1.01 மில்­லி­யன் விலைக்கு வாங்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில் சென்ற மாதம் வரை­, மில்­லி­யன் வெள்­ளிக்­கும் அதிக விலை­யுள்ள 338 வீடு­கள் விற்­ப­னை­யாகி இருக்­கின்­றன என்­பது எஸ்­ஆர்­எக்ஸ் என்ற சொத்­துச் சந்தை இணையவாசல் மூலம் தெரிய வரு­கிறது.

இருந்­தா­லும் கைமா­றும் வீவக மறு­விற்­பனை வீடு­களில் மில்­லி­யன் வெள்ளி வீடு­க­ளின் விகி­தம் 0.3%தான் என்­ப­தும் குறிப்பிடத்தக்க தாக இருக்கிறது.

பினெக்கல்@டக்ஸ்­டன் புளோக் 1-பியில் உள்ள $1.258 மில்­லி­யன் ஐந்­தறை வீடு­தான் இது­வரை கைமா­றிய வீடு­களில் ஆக அதிக விலை­யுள்ள வீடாக உள்­ளது.

வீவக மறு­விற்­பனை வீட்டை வாங்க குறைந்தபட்­சம் ஒரு சிங்­கப்­பூ­ர­ரைக் கொண்ட அல்­லது இரண்டு நிரந்­தரவாசி­க­ளைக் கொண்ட குடும்­பம் தகுதி பெறு­கிறது. இதற்கு வரு­வாய் வரம்பு எது­வும் கிடை­யாது.

இருந்­தா­லும் வீவக வீட்டு மானி­யத்­துக்­கும் கட­னுக்­கும் வரம்பு உண்டு. இத்­த­கைய விலை அதி­கம் உள்ள வீவக மறு­விற்­பனை வீடு­களை வாங்­கு­வோர், தனி­யார் வீடு­களை வாங்­கும் அள­வுக்கு வசதி படைத்­த­வர்­கள்.

ஆனா­லும் இந்த விலைக்கு பிர­தான இடத்­தில் சிறிய தனி­யார் வீட்­டை­தான் அவர்­க­ளால் வாங்க முடி­யும் என்று சொத்­துத்­துறை பகுப்­பாய்­வா­ளர்­கள் கூறு­கி­றார்­கள்.

இத்­த­கைய மில்­லி­யன் வெள்ளி வீவக மறு­விற்­பனை வீட்டை வாங்கு­ வோ­ரில் தனி­யார் வீடு­களில் வசித்து வந்­த­வர்­களே அதி­கம்.

பணக்­கார சிங்­கப்­பூ­ரர்­களும் 20 களில் வய­துள்ள இளம் தம்­பதி­ய­ரும் மற்­ற­வர்­கள்.

இத­னி­டையே, வீவக மில்­லி­யன் வெள்ளி வீடு­கள் பிர­ப­லம் அடை­வதன் கார­ணத்­தால், முக்­கி­ய­மான இடங்­க­ளில் வீடு­களை வைத்­துள்ள சிலர் பணம் பார்க்­க­லாம் என்ற நம்­பிக்­கை­யில் தங்­கள் வீட்டை விற்­ப­னைக்­குக் கொடுக்க முன்­வரக்­கூ­டும் என்­றும் தெரி­கிறது.

விற்பனைக்கு வரும் வீடுகள் பற்றிய விவரங்களைப் பார்க்கையில் இது தெரியவருகிறது.

'புராப்­பர்ட்டி குரு' என்ற நிலச் சொத்து இணை­ய­வா­ச­லில் சனிக்­கி­ழமை நில­வ­ரப்­படி 206 வீவக மறு­விற்­பனை வீடு­கள் விற்­ப­னைக் குக் கொடுக்­கப்­படும் என்று அறி­விக்­கப்­பட்டு இருந்­தது. அவற்­றின் விலை தலா $1 மல்­லி­ய­னுக்­கும் அதி­கம். அதே­போல் '99.co' என்ற இணைய வாச­லில் அத்­த­கைய 223 வீடு­கள் விற்­ப­னைக்கு வந்­தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!