காரின் மீது மரக்கிளை விழுந்தது; மருத்துவமனையில் ஓட்டுநர்

காரின் மீது மரக்கிளை விழுந்தது; மருத்துவமனையில் ஓட்டுநர்

1 mins read
4def8268-5b72-40c6-a992-2fa32f6c6524
-

தியோங் பாரு மற்றும் லோவர் டெல்ட்டா சாலை சந்திப்பில் கார் ஒன்றின்மீது மரத்தின் கிளை விழுந்தது. இதில் காயமடைந்த கார் ஓட்டுநர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அவரது காயங்கள் கடுமையாக இல்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்தது.

கார் ஓட்டுநருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகை அறிகிறது.

உதவிக்கான அழைப்பு திங்கட்கிழமை மாலை 5.15 க்கு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

காரில் பயணிகள் இருந்தார்களா என்பது தெளிவாக இல்லை.