தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொதுப் பேருந்துகளுக்கு சூரியசக்தி: சிங்கப்பூரில் புதிய முறை சோதனை

2 mins read
b672d7b5-4f7d-4ab7-af1f-1b80e804fc3d
எரிபொருளை மிச்சப்படுத்தி கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க சூரிய சக்தி தகடுகள் மூலம் பேருந்துகள் எரிசக்தியைப் பெறும்.'கோ-அஹெட் சிங்­கப்­பூர்' நிறுவனத் தின் இரண்டு பேருந்துகளின் உச்சியில் சூரிய சக்தித் தகடுகள் பொருத்தப்பட்டுஆறு மாதங்களுக்குஇந்தப் புதிய முறை சோதிக்கப்படும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சூரி­ய­சக்தி தக­டு­கள் பொருத்­தப்­பட்ட பொதுப் பேருந்­து­கள் சிங்­கப்­பூ­ரில் முதல் முறை­யாக சோதித்­துப் பார்க்­கப்­ப­டு­கின்­றன. 'கோ-அஹெட் சிங்­கப்­பூர்' பேருந்து நிறு­வ­னம் அந்த முயற்­சி­யில் இறங்கி உள்­ளது. பேருந்­து­க­ளின் வெளிப்­புற கூரை­யில் 1.6 மில்­லி­மீட்­டர் தடி­மன் உள்ள சூரி­ய­சக்­தித் தக­டு­கள் பொருத்­தப்­பட்டு உள்­ளன. வளைந்து கொடுக்­கக்­கூ­டிய அதே­நே­ரம் எளி­தில் சிதை­யாத அந்­தத் தக­டு­களை 'மேன் ஏ22 யூரோ 6' என்னு டீசல் பேருந்­து­கள் இரண்­டில் அந்­நி­று­வ­னம் பொருத்தி உள்­ளது. வரும் செப்­டம்­பர் மாதம் வரை சுமார் ஆறு மாத காலத்­திற்கு சூரி­ய­சக்தி ஆற்­றல் சோதிக்­கப்­படும்.

பாசிர் ரிஸ் பேருந்து நிலை­யத்­தில் இருந்து புறப்­பட்டு, பல பகு­தி­க­ளுக்­குச் சென்­று­விட்டு அதே நிலை­யத்­திற்­குத் திரும்­பி­வ­ரும் சேவை எண் 15, சூரி­ய­சக்­தித் தக­டு­கள் பொருத்­தப்­பட்ட பேருந்­து­களில் ஒன்று. இதன் உச்­சி­யில் பொருத்­தப்­பட்­டுள்ள 20 கிலோ­வுக்­கும் குறை­வான எடை கொண்ட சூரிய சக்தித் தக­டு­கள் 1,000 வாட்ஸ் எரி­சக்­தியை உரு­வாக்­கும் திறன்­பெற்­றவை.

பேருந்­தில் உள்ள பேட்­டரி எனப்­படும் மின்­க­லம் சூரி­ய­சக்தி உரு­வாக்­கித் தரும் எரி­சக்­தி­யைச் சேமிக்­கும். பேருந்­தின் இயந்­தி­ரத்தை முடுக்­கி­வி­ட­வும் இயந்­தி­ரம் நிறுத்தி வைக்­கப்­பட்ட நிலை­யி­லும் விளக்­கு­கள் போன்­ற­வ­வற்­றைப் பயன்­ப­டுத்­த­வும் அந்த எரி­சக்­திப் பயன்­ப­டுத்­தப்­படும். இதன் மூலம் 'கோ-அஹெட் சிங்­கப்­பூர்' நிறு­வ­னத்­தின் ஒவ்­வொரு பேருந்­தும் ஆண்டு ஒன்­றுக்கு 1,400 லிட்­டர் டீச­லைச் சேமிக்க முடி­யும்.

அதா­வது, அந்­தப் பேருந்­து­

க­ளின் எரி­பொ­ருள் பயன்­பாட்டை 3 முதல் 4 விழுக்­காடு வரை சேமிக்க இய­லும். அத்­து­டன் ஆண்டு ஒன்­றுக்கு 3.7 டன் கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்­தைக் குறைக்­கும் ஆற்­ற­லும் அந்­தப் பேருந்­து­க­ளுக்­குக் கிடைக்­கும்.

இந்த சூரி­ய­சக்­தித் தகடு பொருத்­தப்­பட்ட பேருந்து சேவை முறையை பிரிட்­ட­னின் சௌதம்ப்­டன் பகு­தி­யில் 2019ஆம் ஆண்டு முதல் 'கோ-அஹெட்' நிறு­வ­னம் சோதனை நடத்தி வரு­கிறது. அங்கு தற்­போது அந்­தத் தக­டு­கள் பொருத்­தப்­பட்ட 18 பேருந்­து­கள் உள்­ளன.

சிங்­கப்­பூ­ரில் நடத்­தப்­படும் ஆறு மாத கால சோத­னை­யின்­போது, சூரி­ய­சக்­தியை அதற்­கான தக­டு­கள் எந்த அள­வுக்­குப் பெறு­கின்­றன, எரி­பொ­ருள் நுகர்­வைக் குறைக்க எந்த அள­வுக்கு அது பய­னுள்­ள­தாக உள்­ளது, அதிக வெப்­ப­நி­லை­யின்­போ­தும் பேருந்­து­களை அன்­றா­டம் கழு­வும்­போ­தும் தக­டு­கள் அவற்­றைத் தாங்கி உறு­தி­யாக உள்­ள­னவா - என்­பன போன்ற அம்­சங்­கள் உறு­திப்­ப­டுத்­தப்­படும்.