பல்வேறு வர்த்தக தெரிவுகளை ஆராய்கிறது எஸ்பிஎச் குழுமம்

பல்வேறு வர்த்தக தெரிவுகளை ஆராய்கிறது எஸ்பிஎச் குழுமம்

1 mins read
fe8f22c8-272e-481b-b7dd-f4db43ae43cc
-

சிங்­கப்­பூர் பிரஸ் ஹோல்­டிங்ஸ் (எஸ்­பி­எச்) நிறு­வ­னம் அதன் பல்­வேறு வர்த்­த­கங்­க­ளுக்­கான புதிய தெரி­வு­க­ளைப் பரி­சீ­லிக்­கும் உத்­தி­பூர்வ மறு­ஆய்­வில் ஈடு­பட்டு உள்­ளது. அதி­க­பட்ச நீண்­ட­கால பங்­கு­தா­ரர் மதிப்­புக்கு வழி ஏற்­ப­டுத்­தும் நோக்­கம் கொண்­டது இந்த மறு­ஆய்வு என்று எஸ்­பி­எச் குழு­மம் நேற்று அறி­வித்­தது. 'கிரெ­டிட் சுவெஸ் (சிங்­கப்­பூர்)' என்­னும் நிதி ஆலோ­சனை நிறு­வ­னம் மறு­ஆய்வை மேற்­கொள்­ளும்.

கொவிட்-19 கொள்­ளை­நோய் சிர­மத்­தி­லி­ருந்து குழு­மத்­தின் பல்­வேறு வர்த்­த­கங்­கள் மீண்டு வந்­த­தைத் தொடர்ந்து $97.9 மில்­லி­யன் லாபத்தை எஸ்­பி­எச் பதிவு செய்­துள்­ளது. பிப்­ர­வரி 28ஆம் தேதி­யு­டன் முடி­வுற்ற அதன் நிதி ஆண்­டின் முதல் பாதி­யில் நிகர லாபம் 26.1 விழுக்­காடு அதி­க­ரித்து உள்­ள­தா­க­வும் 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' உள்­ளிட்ட நாளி­தழ்­களை வெளி­யி­டும் அக்­கு­ழு­மம் தெரி­வித்­துள்­ளது.

நிறுவனம் $119.8 மில்லி யன் செயல்பாட்டு லாபம் ஈட்டக்கூடியதாகத் தொடரு கிறது. இது 16.6% உயர்வு. இருப்பினும் ஒட்டுமொத்த வருவாய் 4.2% இறங்கி, $460.3 மில்லியன் ஆகி உள்ளது. ஊடக வர்த்தகத் தின் நடைமுறை வருவாய் குறைவையே இது உணர்த்து வதாக எஸ்பிஎச் கூறியது.