புதிதாக 26 பேர் பாதிப்பு: இந்தியாவிலிருந்து திரும்பிய சிங்கப்பூர் குழந்தைக்கும் தொற்று

புதிதாக 26 பேர் பாதிப்பு: இந்தியாவிலிருந்து திரும்பிய சிங்கப்பூர் குழந்தைக்கும் தொற்று

2 mins read
128b0569-59d2-44f4-a2c4-3195cbfb5226
-

சிங்­கப்­பூ­ரில் நேற்று நண்­ப­கல் நில­வ­ரப்­படி புதி­தாக 26 பேருக்­குக் கொரோனா கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

இவர்­க­ளை­யும் சேர்த்து இங்கு பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 60,347ஆக உயர்ந்­தது. இந்த 26 பேரும் வெளி­நா­டு­களில் இருந்து வந்­த­வர்­கள்.

சமூக அள­விலோ வெளி­நாட்டு ஊழி­யர்கள் தங்­கு­வி­டு­தி­க­ளிலோ புதிய கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­க­வில்லை என்று சுகா­தார அமைச்சு நேற்று அதன் முதற்­கட்ட அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

முன்­ன­தாக, திங்­கட்­கி­ழமை கிருமி தொற்­றி­ய­தாக அறி­விக்­கப்­பட்ட 21 பேரில் ஒரு வயது சிங்­கப்­பூர் குழந்­தை­யும் அடங்­கும். இந்­தி­யா­வி­லி­ருந்து திரும்­பிய அந்­தக் குழந்­தை­யைப் பரி­சோ­தித்­த­போது தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

எஞ்­சிய 20 பேரில் இரு சிங்­கப்­பூ­ரர்­கள், மூன்று நிரந்­த­ர­வா­சி­கள் ஆகி­யோ­ரும் அடங்­கு­வர். இவர்­கள் இந்­தியா, மியன்­மார், பிலிப்­பீன்ஸ், துருக்கி போன்ற நாடு­களில் இருந்து சிங்­கப்­பூர் வந்­த­வர்­கள்.

இந்­தி­யா­வி­லி­ருந்து சிங்­கப்­பூர் திரும்­பிய சார்ந்­தோர் அட்டை வைத்­தி­ருக்­கும் ஒரு­வ­ருக்­கும் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

மேலும், மியன்­மார், பங்­ளா­தேஷ், பிலிப்­பீன்ஸ் ஆகிய நாடு­களில் இருந்து இங்கு வந்த 11 வொர்க் பெர்­மிட் ஊழி­யர்­கள் நேற்று முன்­தி­னம் அறி­விக்­கப்­பட்ட 20 பேரில் அடங்­கு­வர். இவர்­களில் இரு­வர் வெளி­நாட்டு பணிப்­பெண்­கள் என சுகா­தார அமைச்சு அதன் அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

குறு­கிய கால வரு­கை­யா­ளர் அட்­டை­யில் சிங்­கப்­பூர் வந்த மூவ­ருக்­கும் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. அவர்­களில் இரு­வர் கன­டா­வி­லி­ருந்­தும் ஒரு­வர் இந்­தி­யா­வி­லி­ருந்­தும் வந்­த­வர்­கள். மலே­சி­யா­வி­லி­ருந்து சிங்­கப்­பூர் வந்த 34 வயது ஆட­வ­ருக்கு கிருமித்­தொற்று உறுதி செய்­யப்­பட்ட நிலை­யில் அவ­ரி­டம் போலிஸ் விசா­ரணை நடத்­தப்­பட்டு வரு­வ­தாக அமைச்சு கூறி­யது. விவ­ரங்­கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

மருத்­து­வ­ம­னை­யில் 39 பேரும் சமூக வசிப்­பி­டங்­களில் 121 பேரும் தொற்­றுக்கு சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டோ­ரில் ஒரு­வர் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் உள்­ளார். சிங்­கப்­பூ­ரில் கிரு­மித்­தொற்று கார­ண­ மாக 30 பேர் உயி­ரி­ழந்துவிட்­ட­னர்.