நாளை மறுநாள் அதிகாலை 6 மணியிலிருந்து அப்பர் புக்கிட் தீமா சாலை இருவழிச் சாலையாக மாற்றப்படும்.
நகரை நோக்கிச் செல்லும் புதிய சாலைக்கான பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்த மாற்றம் காரணமாக டன்னன் சாலை, கிளமெண்டி சாலை ஆகியவற்றை நோக்கிப் பயணம் செய்யும் வாகன ஓட்டுநர்கள் முன்பைவிட குறைவான நேரத்தில் தங்கள் பயண இலக்கை அடைந்து விடலாம். அதுமட்டு மல்லாது, புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று தெரிவிக்கப்பட்டது.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

