தமக்குக் கீழ் வேலை பார்க்கும் பெண் ஊழியருக்கு கைபேசி மூலம் ஆபாசக் காணொளிகளை அனுப்பிவைத்த கண் பராமரிப்புச் சாதனங்களை விற்கும் நிறுவனத்தின் 68 வயது தலைமை மேலாளருக்கு $5,500 அபராதம் விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண் அவரைவிட 25 வயது இளையவர். இவரது அடையாளத்தைக் காக்க அவருக்கு ஆபாசக் காணொளிகளை அனுப்பிவைத்த ஆடவரின் பெயரை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்தப் பெண் தற்போது அந்த நிறுவனத்தில் பணிபுரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
ஆபாசக் காணொளிகளை அனுப்பி வைப்பவர்களுக்கு மூன்று மாதங்கள் வரை சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

