நாளை முதல் மின்சாரக் கட்டணம் உயர்கிறது

நாளை முதல் மின்சாரக் கட்டணம் உயர்கிறது

1 mins read
6de8e684-6b17-49a6-a7d4-73fc631b4745
நான்கறை வீவக வீட்டின் சராசரி மாதாந்திர மின் கட்டணத்தில் (ஜிஎஸ்டி சேர்க்காமல்) $5.62 உயர்வு இருக்கும் என்றும் எஸ்பி குழுமம் கூறியது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஏப்ரல் முதல் ஜூன் வரைக்குமான மின்சாரக் கட்டணம் இதற்கு முந்திய காலாண்டுடன் ஒப்பிடுகையில் சராசரியாக 8.6% உயரும் என்று எஸ்பி குழுமம் இன்று (மார்ச் 31) தெரிவித்தது. அதாவது ஒரு கிலோ வாட் மின்சாரத்திற்கான கட்டணம் 1.77 காசு அதிகரிக்கும். மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மின் உற்பத்திக்காகப் பயன்படுத்தும் எரிபொருளின் விலை அதிகரித்ததே மின் கட்டண உயர்வுக்கு முக்கிய காரணம் என்று அது விளக்கியது.

பொருள் சேவை வரியை (ஜிஎஸ்டி) விலக்கிவிட்டுக் கணக்கிட்டால் கிலோ வாட் மின்சாரத்தின் கட்டணம் 20.76 காசு என்பதில் இருந்து 22.55 காசாக உயரும்.

இதன்படி, நான்கறை வீவக வீட்டின் சராசரி மாதாந்திர மின் கட்டணத்தில் (ஜிஎஸ்டி சேர்க்காமல்) $5.62 உயர்வு இருக்கும் என்றும் எஸ்பி குழுமம் கூறியது.

நாளை (ஏப்ரல் 1) முதல் ஜூன் 30 வரை புதிய கட்டணம் நடப்பில் இருக்கும். எரிசக்திச் செலவு உள்ளிட்ட நான்கு அம்சங்களின் அடிப்படையில் காலாண்டு மின்சாரக் கட்ட ணம் நிர்ணயிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்