முகக்கவசம் அணிந்தவாறு பாடி வழிபடுவதற்கு அனுமதி

முகக்கவசம் அணிந்தவாறு பாடி வழிபடுவதற்கு அனுமதி

2 mins read
046f3adb-ae5b-42f4-9a5f-f7a6a2981bab
-

ஏப்ரல் 5 முதல் வழிபாட்டுத் தலங்களில் புதிய நடைமுறைகள்

வழி­பாட்­டுத் தலங்­களில் ஏப்­ரல் 5ஆம் தேதி­யி­லி­ருந்து பாடி வழி­பாடு நடத்த அனு­மதி அளிக்­கப்­படும் என்று கலா­சார, சமூக இளை­யர் துறை அமைச்சு அறி­வித்­துள்­ளது. ஆனால், வழி­பாட்­டுச் சேவை­யின்­போது முகக்­க­வ­சத்தை அகற்­றா­மல் 30 நிமி­டங்­கள் வரை மட்­டுமே பாட முடி­யும் என அமைச்சு கூறி­யது.

கொவிட்-19 நோய்ப் பர­வல் முறி­ய­டிப்­புத் திட்­டம் முடி­வுக்கு வந்­த­தைத் தொடர்ந்து முத­லாம் கட்­டத் தளர்­வின் ஒரு பகு­தி­யாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் வழி­பாட்­டுத் தலங்­கள் மீண்­டும் திறக்­கப்­பட்­டன. ஆனால், வழி­பாட்­டில் ஈடு­ப­டு­வோர் இது­வரை பாட அனு­மதி அளிக்­கப்­ப­ட­வில்லை.

வழி­பாட்­டில் ஈடு­ப­டு­வோர் பாடு­வ­தற்­காக நல்ல காற்­றோட்ட வசதி செய்து தரப்­பட வேண்­டும் என்று அமைச்சு கூறி­யது. வழி­பாட்­டுத் தலங்­க­ளின் கத­வு­களை­யும் சன்­னல்­க­ளை­யும் திறந்து வைப்­ப­தன் மூலம் காற்­றோட்ட வச­தி­யைச் செய்து தர முடி­யும். வழி­பாட்­டுச் சேவை­க­ளுக்கு இடை­யில் வழி­பாடு நடை­பெ­றும் இடம் சுத்­தம் செய்­யப்­பட வேண்­டும்.

வழி­பாட்­டில் ஈடு­ப­டு­வோ­ரில் பாடு­வோர் எட்­டுப் பேர் வரை குழு­வாக இருக்­க­லாம். அத்­த­கைய குழுக்­க­ளுக்கு இடையே 2 மீட்­டர் பாது­காப்பு இடை­வெளி இருப்­பதை உறு­தி­செய்ய வழி­பாட்­டுத் தலங்­கள் ஊக்கு­விக்­கப்­ப­டு­கின்­றன.

சமய நூல்­கள், வழி­பட பயன்­படும் பாய்­கள் போன்­ற­வற்றை ஒரு­வர் மற்­றொ­ரு­வ­ரு­டன் பகிர்ந்­து­கொள்­ளக்­கூ­டாது. கார­ணம், இத்­த­கைய நட­வ­டிக்­கை­யால் கொவிட்-19 பர­வும் சாத்­தி­யம் அதி­க­ரிக்­கிறது.

முன்­ன­தாக, வழி­பாட்­டுச் சேவையை நடத்த 30 பேர் வரை அனு­மதி அளிக்­கப்­பட்­டது. அவர்­களில் ஐவர் மட்­டும் முகக்­க­வ­சம் அணி­யா­மல் பாட அனு­ம­திக்­கப்­பட்­டது.

ஏப்­ரல் 5ஆம் தேதி­யி­லி­ருந்து இந்த 30 பேர் எண்­ணிக்கை வரம்­பில் மாற்­றம் இல்லை என்று அமைச்சு நேற்று கூறி­யது. ஆனால், முகக்­க­வ­சம் அணி­யா­மல் பாட அனு­ம­திக்­கப்­படும் அந்த ஐவர் போக, முகக்­க­வ­சம் அணிந்­த­வாறு பாட மற்­ற­வர்­க­ளுக்கு அனு­மதி அளிக்­கப்­ப­டு­கிறது. எனி­னும், வழி­பாட்­டுச் சேவையை நடத்து­வோ­ருக்­கும் வழி­ப­டு­வோ­ருக்­கும் இடையே குறைந்­தது 3 மீட்­டர் இடை­வெளி இருக்க வேண்­டும். இதற்­கி­டையே, ஏப்­ரல் 24ஆம் தேதி­யி­லி­ருந்து வழி­பாட்­டுத் தலங்­களில் திரு­மண சடங்­கு­களில் 250 பேர் வரை பங்­கேற்க அனு­மதி அளிக்­கப்­ப­டு­கிறது. தற்­போது இந்த எண்­ணிக்கை 100 ஆக உள்­ளது. ஆனால், சடங்­கிற்கு முன்­னர் திரு­ம­ணத் தம்­பதி கொவிட்-19 பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட வேண்­டும்.

ஏப்­ரல் 24ஆம் தேதி­யி­லி­ருந்து வழி­பாட்­டுத் தலங்­களில் இறு­திச்­ச­டங்­கு­க­ளி­லும் கண்­வி­ழிப்­புச் சடங்­கு­க­ளி­லும் ஒரே நேரத்­தில் 50 பேர் வரை பங்­கேற்க அனு­ம­திக்­கப்­படும். தற்­போது இந்த எண்­ணிக்கை 30 ஆக உள்­ளது. ஆனால், இறந்­த­வ­ரின் உடலை நல்­ல­டக்­கம் அல்­லது தக­னம் செய்­யும் நாளில்­தான் 50 பேர் வரை ஒன்­று­கூட அனு­மதி அளிக்­கப்­படும்.

இந்­நி­லை­யில், வழி­பாட்­டுச் சேவை நடத்­தும் சமய அமைப்­பு­கள் ஏப்­ரல் 19ஆம் தேதி­யி­லி­ருந்து தங்­க­ளது வளா­கங்­க­ளின் நுழை­வா­யில்­களில் 'சேஃப்என்ட்ரி கேட்வே' முறையை வைக்க வேண்­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.