நிலத்தடிக்கு சூரிய ஒளியை செலுத்தும் அறிவார்ந்த சாதனம்

நிலத்தடிக்கு சூரிய ஒளியை செலுத்தும் அறிவார்ந்த சாதனம்

1 mins read
b0384b3b-d130-409a-95f4-b69d88095028
உதவிப் பேராசிரியர் யூ சியோங்வூ (இடம்), டாக்டர் சாரு கொவெல். படம்: சாவ்பாவ் -

சூரிய ஒளியை நிலத்­த­டிக்கு அடியே உள்ள சுரங்­கம் போன்ற இடங்­க­ளுக்­குச் செலுத்­தும் அறி­வார்ந்த சாத­னம் ஒன்றை நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­கலைக்­க­ழக ஆய்­வா­ளர்­கள் உரு­வாக்கி­உள்­ள­னர்.

சூரிய வெளிச்­சத்­தைப் பூதக்­கண்­ணாடி கொண்டு ஓர் இடத்­தில் குறி­வைத்­தால் அங்கு வெப்­பம் அதி­க­ரித்து நெருப்பு ஏற்­படும். அதே அணு­கு­முறையை இச்­சா­த­னத்­திற்­குப் பயன்­படுத்­தி­யுள்­ள­னர் ஆய்­வா­ளர்­கள்.

சாத­னத்தை வடி­வ­மைத்­த­வர்­கள் உத­விப் பேரா­சி­ரி­யர் யூ சியோங்வூ மற்­றும் ஆய்­வா­ளர் டாக்­டர் சாரு கொவெல்.

அவர்­கள் உரு­வாக்­கி­யுள்ள மாதிரி வடி­வத்­தின் எடை 10 கிலோ, உய­ரம் 50 சென்­டி­மீட்­டர் என்று கூறப்­பட்­டது.

கடை­களில் கிடைக்­கக்­கூ­டிய மூலப்­பொ­ருட்­க­ளைக் கொண்டு தங்­க­ளின் சாத­னம் உரு­வாக்­கப்­பட்­ட­தா­க­வும் இத­னால் அதை எளி­தில் பெரிய வடி­வில் உரு­வாக்­க­லாம் என்­றும் பேரா­சி­ரி­யர் யூ தெரி­வித்­தார். சூரிய ஒளி­யின் முழு வீச்சை அதி­க­பட்­ச­மாக நிலத்­த­டி­யின் இரண்டு மாடி ஆழம் வரை செலுத்­த­லாம் என்று கூறப்­பட்­டது.

தங்­க­ளின் சாத­னத்­திற்கு அவர்­கள் பயன்­ப­டுத்­திய கம்­பி­வ­டம், நெகி­ழி­யால் ஆனது. ஆனால், அதுவே கண்­ணாடி இழை­க­ளால் செய்­யப்­பட்­டால், சூரிய வெளிச்­சம் நிலத்­த­டி­யின் 10 மாடி ஆழம் வரை செல்­ல­லாம் என்­றார் டாக்­டர் சாரு.

புதிய உள்­கட்­ட­மைப்பு, சேமிப்பு, பயன்­பாட்டு இடங்­களை நிலத்­த­டி­யில் உரு­வாக்­கும் சாத்­தி­யத்தை சிங்­கப்­பூர் அர­சாங்­கம் ஆராய்ந்து வரும் நிலை­யில், அத்­த­கைய நிலத்­தடி இடங்­களில் 24 மணி நேர­மும் ஒளி இருப்­ப­தன் தேவையை இந்த அறி­வார்ந்த சாத­னம் நிறை­வு­செய்ய உத­வும் என்­றது என்­டியு.