தேசிய பள்ளி விளையாட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம்

தேசிய பள்ளி விளையாட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம்

2 mins read
cf686a34-5dbd-4010-8cde-a87ce4a090e1
-

கொவிட்-19 கிரு­மித்­தொற்று தொடர்ந்து கட்­டுப்­பாட்­டுக்­குள் இருப்­ப­து­டன் சிங்­கப்­பூ­ரில் மேலும் அதி­க­மா­னோர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டி­ருப்­பர் என்ற நிலை­யில் 'என்­எஸ்ஜி' எனப்­படும் தேசிய பள்ளி விளை­யாட்­டு­களில் இவ்­வாண்டு பிற்­பா­தி­யில் கூடு­தல் விளை­யாட்­டு­கள் சேர்த்­துக்­கொள்­ளப்­ப­ட­லாம் என்­றார் கல்வி அமைச்­சர் லாரன்ஸ் வோங்.

என்­எஸ்­ஜி­யின் தொடக்க நிகழ்ச்சி நேற்று 'அவர் தெம்­ப­னிஸ் ஹப்'பில் நடை­பெற்­ற­போது திரு வோங் இத­னைத் தெரி­வித்­தார்.

நில­வ­ரத்தை ஏற்­பாட்­டா­ளர்­கள் தொடர்ந்து மறு­ஆய்வு செய்து வரு­வ­தா­க­வும் ஒரு சில பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­க­ளைத் தளர்த்­தும் சாத்­தி­யம் உண்டு என்­றும் அவர் தெரி­வித்­தார்.

இவ்­வாண்­டின் விளை­யாட்­டு­கள் திங்­கட்­கி­ழமை தொடங்கி மே 27ஆம் தேதி­யன்று முடி­வ­டை­யும். 29 விளை­யாட்டு வகை­களில் 12 மட்­டுமே இம்­முறை இடம்­பெற்­றுள்­ளன. வழக்­க­மாக என்­எஸ்­ஜி­யில் கலந்­து­கொள்­ளும் 60,000 மாணவ விளை­யாட்­டுத் திற­னா­ளர்­க­ளுக்­குப் பதி­லாக இம்­முறை 12,000 பேர் மட்­டுமே பங்­கேற்­கின்­ற­னர். பிற­ருடன் குறைந்த அளவு உடல் ரீதி­யான தொடர்பு ஏற்­ப­டு­வது, போட்டி இடம்­பெ­றும் இடங்­களில் வெவ்­வேறு பள்­ளி­க­ளைச் சேர்ந்த போட்டி­யா­ளர்­க­ளி­டையே குறைந்த தொடர்பு ஏற்­ப­டு­வது ஆகி­ய­வற்­றின் அடிப்­ப­டை­யில் விளை­யாட்­டு­கள் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டன.

"விளை­யாட்­டு­களை நாங்­கள் மீண்­டும் தொடங்­கி­யி­ருந்­தா­லும் அதே பாணி­யில் அவை நடக்­காது. மாற்­றங்­கள் செய்­துள்­ளோம், முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள், கூடு­தல் மாற்­றங்­கள் ஆகி­ய­வற்றை நடை­மு­றைப்­ப­டுத்தி உள்­ளோம்," என்­றார் திரு வோங்.

"சிங்­கப்­பூ­ரில் கிரு­மித்­தொற்று நில­வ­ரம் தற்­போது கட்­டுப்­பாட்­டுக்­குள் இருந்­தா­லும் நாம் இன்­னும் நெருக்­க­டி­யி­லி­ருந்து விடு­ப­ட­வில்லை. சமூ­கத்­தில் கிருமி இன்­னும் உள்­ளது, அது தொடர்ந்து குறைந்த அள­வி­லும் சமூ­கத்­தில் பர­வும் சாத்­தி­ய­மும் அதி­கம். அத­னால் நாம் தொடர்ந்து விழிப்­பு­டன் இருக்க வேண்­டும்," என்­றார்.

ஓர் இடத்­துக்­குள் அனு­ம­திக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்­கை­யில் கட்­டுப்­பாடு, பார்­வை­யா­ளர்­களை அனு­ம­திக்­காத நிலை போன்ற பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­கள் தற்­போது என்­எஸ்­ஜி­யில் நடை­முறைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இவ்­வாண்டு தொடக்­கத்­தில் உள்­ளூர் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­த­தை­யும் விளை­யாட்டு­கள் ஒத்­தி­வைக்­கப்­பட்­ட­தை­யும் அமைச்­சர் வோங் நினை­வு­கூர்ந்­தார். ஏற்­கெ­னவே, என்­எஸ்ஜி சென்ற ஆண்டு இரு­முறை ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. பின்­னர், 1959ஆம் ஆண்­டுக்­குப் பிறகு முதல் முறை­யாக சென்ற ஆண்­டில் ரத்­தும் செய்­யப்­பட்­டது. உள்­ளூர் கிரு­மித்­தொற்­று­க­ளைக் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்­டு­வந்து, கல்­வி­யா­ளர்­கள், மாண­வர்­கள், பள்ளி ஊழி­யர்­கள் உட்­பட சமூ­கத்­தி­ன­ருக்­குத் தடுப்­பூ­சித் திட்­டத்­தைத் தீவி­ரப்­ப­டுத்­தி­ய­தால் தேசிய பள்ளி விளை­யாட்­டு­களை நம்­பிக்­கை­யு­டன் தொடங்க முடிந்­த­தா­க­வும் திரு வோங் தெரி­வித்­தார்.