ஜூரோங் புத்தாக்க வட்டாரத்தில் அடுத்த 18 மாதங்களில் 1,200 வேலைகள்

ஜூரோங் புத்தாக்க வட்டாரத்தில் அடுத்த 18 மாதங்களில் 1,200 வேலைகள்

2 mins read
74fe7269-ef5f-4de2-9e31-693c7eaba89c
-

அடுத்த 18 மாதங்­களில் ஜூரோங் புத்­தாக்க வட்­டா­ரம் (ஜெஐடி), சுமார் 1,200 புதிய வேலை­களை உரு­வாக்­க­வுள்­ளது. உயர்­நிலை உற்­பத்தி, நகர்ப்­புற போக்­கு­வ­ரத்து, நக­ரத் தீர்­வு­கள் போன்ற துறை­களில் இவ்­வே­லை­கள் அமைந்­தி­டும் என்று கூறப்­பட்­டது.

தொழிற்­சா­லை­கள் அவற்­றின் செயல்­பா­டு­களை ஜெஐடி வளா­கத்­திற்கு மாற்­றும்­போது மேலும் 3,300 வேலை­களும் இட­மாற்­றம் காணும்.

இதன்­படி ஜெஐடி வளா­கத்­தில் அக்­கு­றிப்­பிட்ட கால­கட்­டத்­தில் மொத்­தம் 4,500 வேலை­கள் அமை­ய­வுள்­ளன. ஜெஐ­டிக்கு மாறும் நிறு­வனங்­களில் நகர்ப்­புற, உள்­கட்­டமைப்பு ஆலோ­சனை நிறு­வ­ன­மான சர்­பானா ஜூரோங், உற்­பத்தி ஆலை­யான ஷிமானோ ஆகி­யவை அடங்­கும்.

ஜெஐ­டி­யில் அமைந்­துள்ள சிங்­கப்­பூர் டெக்னோ சென்­ட­ருக்கு நேற்று வர்த்­தக தொழில் இரண்­டாம் அமைச்­சர் டான் சீ லேங் சென்­றி­ருந்­த­போது இத்­த­க­வல்­களை ஊட­கங்­க­ளுக்­குத் தெரி­வித்­தார்.

ஜூரோங் புத்­தாக்க வட்­டா­ரத்­தின் முதல் கட்ட கட்­டு­மா­னப் பணி­கள் 2022ஆம் ஆண்­டிற்­குள் முடிந்து­வி­டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. ஏறத்­தாழ 600 ஹெக்­டர் பரப்­ப­ள­வைக் கொண்­டி­ருக்­கும் அந்த வட்­டா­ரம், முழுமை அடைந்­த­தும் 95,000க்கும் அதி­க­மான வேலை­களை உரு­வாக்­கித் தரும் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

சேர்க்கை உற்­பத்தி வச­தி­க­ளைப் பாது­காப்­பாக அமைப்­பது, அவற்­றைச் செயல்­ப­டுத்­து­வது, பரா­ம­ரிப்­பது போன்­ற­வற்­றின் தொடர்­பில் புதிய தொழில்­துறை வழி­காட்­டு­தல் தொகுப்­பை­யும் நேற்று டாக்­டர் டான் வெளி­யிட்­டார். நம்­பிக்­கை­யான உற்­பத்தி மைய­மாக சிங்­கப்­பூர் திகழ, இந்த வழி­காட்­டு­தல்­கள் பங்­காற்­றும் என்­றார் டாக்­டர் டான்.

"இது­போன்ற தரக் குறி­யீ­டு­களை உரு­வாக்­கு­வ­தா­லும் துறை­யி­னர் அனை­வ­ரும் அவற்­றைப் பின்­பற்­று­வ­தா­லும் நமது செயல்­பாடு­கள் அனைத்­து­லக அள­வில் சென்­ற­டை­யும். தரத்தை உறு­தி­செய்­வ­தி­லும் தரக்­கு­றி­யீ­டு­கள் மிக அதி­க­மாக இருப்­ப­தி­லும் நாம் கவ­னம் செலுத்­து­கி­றோம் என்­பதை அறி­வார்­கள்," என்­றார் அவர்.