நிபுணர்கள் கருத்து: பொருளியல் வளர்ச்சி, கல்வி முதலீடு ஆகியவை சமத்துவமின்மையைக் குறைக்க அவசியம்

நிபுணர்கள் கருத்து: பொருளியல் வளர்ச்சி, கல்வி முதலீடு ஆகியவை சமத்துவமின்மையைக் குறைக்க அவசியம்

2 mins read
94d8711b-6f37-4d61-8e4d-c8f870f0f414
-

சமத்­து­வ­மின்­மை­யைக் குறைப்­ப­தற்­குப் பொரு­ளி­யல் வளர்ச்­சி­யும் கல்வி முத­லீ­டும் அதி­முக்­கி­யம். யேல்-என்­யு­எஸ் அனைத்­து­லக விவ­கா­ரங்­கள் தொடர்­பில் நேற்று இணை­யம் வழி நடை­பெற்ற விரி­வு­ரை­யில் இதுவே நிபு­ணர்­க­ளின் இறுதி முடி­வாக இருந்­தது.

கொவிட்-19 கொள்­ளை­நோ­யால் பெண்­கள் மீது சம­னற்ற ஒரு தாக்­கம் ஏற்­பட்­டுள்­ளது. வீட்­டுப் பொறுப்பு­கள் அதி­க­ரித்­து­விட்­ட­தால் கல்­வி­யைக் கைவி­டு­வது, வேலை­யி­லி­ருந்து வில­கு­வது போன்ற சூழல்­க­ளுக்­குப் பெண்­கள் ஆளா­கின்­ற­னர். வேலை செய்­வது தொடர்­பான ஏற்­பா­டு­களில் நீக்­குப்­போக்கு இருப்­பது போன்ற கொள்­கை­கள் உத­வி­யாக இருந்­தா­லும், நீடித்த பொரு­ளி­யல் வளர்ச்­சி­யும் கல்வி முத­லீ­டு­க­ளுமே எதிர்­கா­லத்­திற்கு மிக முக்­கி­ய­மாக உள்­ளன.

முடக்­க­நிலை, வர்த்­த­கங்­கள் மூடல் போன்­ற­வற்­றால் உணவு பானம், சில்­லறை வர்த்­த­கம், பொழுது­போக்கு போன்ற சேவைத் துறை­களில் உள்ள பெண்­கள் பலர், வேலை­யில்­லாத நிலைக்­குத் தள்­ளப்­பட்­ட­னர்.

கடந்த கால பொரு­ளி­யல் மந்­த­நி­லை­க­ளின் போது, பெண்­க­ளைக் காட்­டி­லும் ஆண்­கள் அதி­கம் பாதிக்­கப்­பட்­ட­னர். ஆனால் இம்­முறை அப்­ப­டி­யல்ல என்­றார் முன்­னாள் உலக வங்­கித் தலை­மைப் பொரு­ளி­ய­லா­ள­ரும் யேல் பல்­கலைக்­க­ழக பொரு­ளி­யல் பேரா­சி­ரி­ய­ரு­மான பினெ­லோபி கோல்ட்­பெர்க்.

குறைந்த வரு­மான நாடு­களில் முறை­சாரா வேலை­களில் பெண்­கள் கூடு­த­லாக சேர்க்­கப்­ப­டு­கின்­ற­னர். ஆனால் முறை­யான வேலை ஒப்­பந்­தங்­க­ளின்றி இவர்­கள் அர­சாங்­கத்­தின் கண்­ணுக்­குத் தெரி­யா­த­வர்­கள். அத­னால், கொவிட்-19 நிவா­ர­ணத் திட்­டங்­க­ளால் இவர்­கள் பய­ன­டை­ய­வும் முடி­யாது என்­றார்.

நீக்­குப்­போக்­கான வேலை ஏற்­பா­டு­கள் இருப்­ப­து­டன் குழந்­தைப் பரா­ம­ரிப்பு, முதி­யோர் பரா­ம­ரிப்பு கொள்­கை­கள் தீவி­ர­மாக நடை­முறைப்­ப­டுத்­தப்­பட்­டால் ஊழி­ய­ர­ணி­யி­லி­ருந்து வெளி­யே­றும் நிலை­மை­யில் உள்ள பெண்­க­ளுக்கு உத­வி­யாக இருக்­கும் என்­றார் அவர். இருப்­பி­னும் நீடித்த காலத்­திற்­குச் சமத்­து­வ­மின்­மை­யைக் குறைக்க முக்­கி­ய­மான ஓர் அம்­ச­மாக விளங்­கு­வது, பொரு­ளி­யல் வளர்ச்­சியே என்­றார் ஹார்­வர்ட் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் அனைத்­து­லக அர­சி­யல் பொரு­ளி­யல் பேரா­சி­ரி­யர் டானி ரோட்­ரிக்.

திறந்த அனைத்­து­லக பொரு­ளி­யல் முறை­யைத் தக்க வைப்­பது, வர்த்­த­கம், முத­லீடு ஆகி­ய­வற்றை ஏற்­கும் ஓர் உல­க­ளா­விய பொரு­ளி­யல் அமை­வது, ஆலோ­ச­னை­கள், தடுப்­பூ­சி­க­ளைப் பகிர்ந்­து­கொள்­வது என்ற போக்கு வேண்­டும் என்­றார் அவர்.