மாணவர்கள், நிபுணர்களுக்கு இலவச மின்னிலக்கப் பயிற்சி

மாணவர்கள், நிபுணர்களுக்கு இலவச மின்னிலக்கப் பயிற்சி

2 mins read
18255b0f-e6cf-4e38-9221-1ff6ee70b4b4
-

2,700 பேருக்கும் 1,000 வர்த்தகங்களுக்கும் பலனளிக்கும் புதிய நடவடிக்கை தொடக்கம்

சிங்­கப்­பூ­ரில் உள்ள மாண­வர்­கள், வேலை தேடு­வோர், வேலை செய்­யும் நிபு­ணர்­கள், சிறு வர்த்­தக முத­லா­ளி­கள் போன்­றோர் மின்­னி­லக்­கச் சந்­தைப்­ப­டுத்­து­த­லுக்­கான திறன்­களை இல­வ­ச­மா­கப் பெறு­வ­தற்­கான திட்­டம் ஒன்றை ஃபேஸ்புக் நேற்று தொடங்­கி­யது.

இங்­குள்ள 2,700 தனிப்­பட்­ட­வர்­க­ளுக்­கும் 1,000 சிறிய நடுத்­தர வர்த்­த­கங்­க­ளுக்­கும் திறன் வளர்ப்­புப் பயிற்சி அளிக்க 'ஃபேஸ்புக் சிங்­கப்­பூர்' திட்­டம் வகுத்து உள்­ளது. சந்­தைப்­ப­டுத்­து­த­லுக்­கான அறி­வி­யல், சமூக ஊட­கத்­தில் சந்­தைப்­ப­டுத்­து­தல், வாடிக்­கை

­யா­ளர்­களை ஈடு­ப­டுத்­தும் வகை­யில் சமூக ஊடக அம்­சங்­களை உரு­வாக்­கு­தல் போன்­ற­வற்­றில் ஃபேஸ்புக் பயிற்சி அளிக்­கும்.

இணை­யக் கருத்­த­ரங்­கு­கள், பயி­ல­ரங்­கு­கள், இணை­யக் கலந்­து­ரை­யா­டல்­கள், கற்­றல் தளங்­கள் போன்­றவை மூலம் நான்கு பயிற்­சித் திட்­டங்­கள் இடம்­பெ­றும். ஃபேஸ்புக் மற்­றும் தொழில்­துறை நிபு­ணர்­களும் இவற்­றில் பங்­கேற்று பயிற்சி வழங்­கு­வர். இவற்­றில் மூன்று திட்­டங்­களில் பங்­கேற்று வெற்­றி­க­ர­மாக பயிற்­சியை முடிப்­போ­ருக்கு சான்­றி­தழ்­கள் வழங்­கப்­படும்.

'எஸ்­ஜி­டெக்' எனப்­படும் தொழில்­நுட்­பத் துறை­க­ளின் சங்­கத்­து­டன் ஃபேஸ்புக் பங்­கா­ளித்­து­வம் ஏற்­ப­டுத்தி பயிற்­சித் திட்­டங்­களை வகுத்து வரு­கின்­றது.

இதற்கு தக­வல் தொடர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­யம் (ஐஎம்­டிஏ) எண்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர், சிங்­கப்­பூர் மின்­னி­லக்­கத் தொழில்­துறை போன்­றவை ஆத­ரவு வழங்­கும். இவற்­றில் சிங்­கப்­பூர் மின்­னி­லக்­கத் தொழில்­துறை என்­பது பொரு­ளி­யல் வளர்ச்­சிக் கழகம், எண்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர், ஐஎம்­டிஏ ஆகி­ய­வற்­றின் இணை அலு­வ­ல­கம் ஆகும்.

புதிய திறன்­வ­ளர்ப்புத் திட்­டத்­திற்­குத் தேவைப்­படும் செலவு அனைத்­தை­யும் ஃபேஸ்புக் ஏற்­கும். இருப்­பி­னும் அது எவ்­வ­ளவு என்று தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.

இந்­தப் புதிய நட­வ­டிக்கை குறித்து தொடர்பு, தக­வல் அமைச்­சர் எஸ்.ஈஸ்­வ­ரன் நேற்று ஓர் அறிக்கை வெளி­யிட்­டார்.

"நாட்­டின் எல்­லாத் துறை­க­ளி­லும் மின்­னி­லக்­கம், தொழில்­நுட்­பம் போன்­ற­வற்­றுக்­கான தேவை வலு­வாக இருக்­கும் நேரத்­தில் ஃபேஸ்புக்­கின் திறன்­வ­ளர்ப்பு போன்ற நட­வ­டிக்­கை­கள் அவ­சி­ய­மான ஒன்று," என்று அதில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"பரந்த பொரு­ளி­ய­லுக்­கான உரு­மாற்­றம், வளர்ச்சி போன­ற­வற்­றின் உந்­து­சக்­தி­யாக விளங்­கும் தக­வல்­தொ­டர்பு தொழில்­நுட்­பத் துறை நமது நிறு­வ­னங்­க­ளுக்­கும் ஊழி­யர்­க­ளுக்­கும் வியத்­தகு வாய்ப்­பு­கள் பல­வற்றை வழங்க உள்­ளது," என்­றும் திரு ஈஸ்­வ­ரன் கூறினார்.