பிரான்சில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒருவகை பாலாடைக் கட்டியை கடைகளில் இருந்து அகற்றுவதற்கான
உத்தரவை சிங்கப்பூர் உணவு அமைப்பு பிறப்பித்துள்ளது. இங்கு படத்தில் காணப்படும் பாலாடைக் கட்டி தயாரிப்பில் ஆபத்தான நுண்ணுயிர் காணப்பட்டதைத் தொடர்ந்து இந்நட
வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 28.03.2021 என காலாவதி தேதி அச்சிடப்பட்ட 150 கிராம் டப்பாவில் உள்ள பாலாடைக் கட்டியே பாதிப்புக்குள்ளான பொருள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீட்டுக்கொள்ள உணவு, உணவளிப்புக்கான விரைவு விழிப்புணர்வு ஐரோப்பிய ஆணையம் உத்தரவு வெளியிட்டிருப்பதாகவும் சிங்கப்பூர் உணவு அமைப்பு குறிப்பிட்டது.

