இன்று முதல் மின் கட்டணம் உயர்வு

இன்று முதல் மின் கட்டணம் உயர்வு

1 mins read
a240e966-05d2-442c-8e98-facaca368cdd
-

ஏப்­ரல் முதல் ஜூன் வரைக்­குமான மின்­சா­ரக் கட்­ட­ணம் இதற்கு முந்­திய காலாண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் சராசரியாக 8.6% உய­ரும் என்று எஸ்பி

குழு­மம் நேற்று தெரி­வித்­தது. அதாவது ஒரு கிலோ வாட் மின்சாரத்திற்கான கட்டணம் 1.77 காசு அதிகரிக்கும். மின்­சா­ரத்தை உற்­பத்தி செய்­யும் நிறு­வ­னங்­கள் மின் உற்­பத்­திக்­கா­கப் பயன்­ப­டுத்­தும் எரி­பொ­ரு­ளின் விலை அதி­க­ரித்­ததே மின் கட்­டண உயர்­வுக்கு முக்­கிய கார­ணம் என்று அது விளக்­கி­யது.

பொருள் சேவை வரியை (ஜிஎஸ்டி) விலக்­கி­விட்­டுக் கணக்­கிட்­டால் கிலோ வாட் மின்­சா­ரத்­தின் கட்­ட­ணம் 20.76 காசு என்­ப­தில் இருந்து 22.55 காசாக உய­ரும்.

இதன்­படி, நான்­கறை வீவக வீட்­டின் சராசரி மாதாந்­திர மின் கட்­ட­ணத்­தில் (ஜிஎஸ்டி சேர்க்­கா­மல்) $5.62 உயர்வு இருக்­கும் என்­றும் எஸ்பி குழு­மம் கூறி­யது.

இன்று (ஏப்ரல் 1) முதல் ஜூன் 30 வரை புதிய கட்டணம் நடப்பில் இருக்கும். எரிசக்திச் செலவு உள்ளிட்ட நான்கு அம்சங்களின் அடிப்படையில் காலாண்டு மின்சாரக் கட்ட ணம் நிர்ணயிக்கப்படுகிறது.