அதிகமான ஊழியர்கள் தங்களது அலுவலகத்திற்கும் வேலையிடத்திற்கும் திரும்பும் வேளையில் அவர்களுக்கு அதிக நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளை அனுமதிக்க வேண்டும் என்று நிறுவனங்களை பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா கேட்டுக்கொண்டுள்ளார். ஊழியர்கள் தங்களது வயதான பெற்றோர்
களையும் குழந்தைகளையும் கவனிக்க போதுமான நேரத்ைதயும் வாய்ப்பையும் அவர்களுக்கு வழங்குவது பற்றி முதலாளிகள் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
தேசிய மக்கள்தொகை மற்றும் திறனாளர் பிரிவைக் கவனிக்கும் குமாரி இந்திராணி, கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் வேளையில் நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் இருவேறு சூழல்களில் பணிபுரியும் வாய்ப்பை வழங்குவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வீட்டில் சில நாட்களும் அலுவலகத்தில் சில நாட்களும் அவர்கள் வேலை செய்யும் விதத்தில் ஏற்பாடுகள் தரப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
எஸ்ஐஐஏ எனப்படும் அனைத்துலக விவகாரங்களுக்கான சிங்கப்பூர் நிறுவனம் என்னும் அமைப்பு நடத்திய கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்றுப் பேசிய குமாரி இந்திராணி, "சிங்கப்பூரின் ஒட்டுமொத்த பிறப்பு விகிதம் ஆகக் குறைவாகச் சரிந்துவிட்ட நிலையில் அதிகமான குழந்தைகள் இங்கு தேவைப்படுகிறார்கள்.
"அதே நேரம் குடும்பங்களைப் பற்றிப் பேசும்போது வேலையிட மனஉளைச்சல், குழந்தைப் பராமரிப்புக்கும் பெற்றோர் கவனிப்புக்கும் போதுமான நேரமின்மை ஆகியவற்றை நிறையப் பேர் சந்திக்கிறார்கள். அதிகமான ஊழியர்கள் வேலைக்குத் திரும்புவதால் முதலாளிகளுக்கு அதிக மகிழ்ச்சி ஏற்படும். இதனை நாம் முன்னோக்கிச் சிந்திக்கையில், இரு வகை வேலைமுறை அவசியப்படுகிறது.
"குழந்தைகளையும் வயதான பெற்றோரையும் பராமரிக்க நேரம் கொடுத்து நீக்குப்போக்காக நடந்துகொள்ளும் முதலாளிகளை ஊழியர்கள் மெச்சுவார்கள்," என்றும் அவர் தெரிவித்தார்.

