சமூகத்தில் ஒருவர் உள்ளிட்ட 34 பேருக்கு கிருமித்தொற்று

சமூகத்தில் ஒருவர் உள்ளிட்ட 34 பேருக்கு கிருமித்தொற்று

1 mins read
87cf9cd5-4f22-4e4f-bea9-983efaadeb06
-

சிங்­கப்­பூ­ரில் நேற்று நண்­ப­கல் நில­வ­ரப்­படி புதி­தாக 34 பேருக்­கு கொரோனா கிரு­மித்­தொற்று உறு­தி­ செய்­யப்­பட்­டது. இவர்­க­ளை­யும் சேர்த்து இங்கு பாதிக்­கப்­பட்­ட­வர்­

க­ளின் எண்­ணிக்கை 60,381ஆக அதி­க­ரித்­தது.

புதி­தாக அறி­விக்­கப்­பட்ட 34 பேரில் 33 பேர் வெளி­நா­டு­களில் இருந்து வந்­த­வர்­கள். ஒரு­வர் சமூக அள­வில் பாதிக்­கப்­பட்­ட­வர்.

வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­

வி­டு­தி­யில் யாருக்­கும் பாதிப்பு இல்லை என்று சுகா­தார அமைச்சு அதன் முதற்­கட்ட அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

செவ்­வாய்க்­கி­ழமை தொற்று உறுதி செய்­யப்­பட்ட 26 பேரும் வெளி­நா­டு­களில் இருந்து வந்­த­வர்­கள். சிங்­கப்­பூ­ரர்­கள் எழு­வ­ரும் நிரந்­த­ர­வா­சி­கள் மூவ­ரும் இவர்­களில் அடங்­கு­வர். இந்­தியா, பங்­ளா­தேஷ், கத்­தார், ஸ்பெ­யின், பிரிட்­டன் போன்ற நாடு­களில் இருந்து இவர்­கள் சிங்­கப்­பூர் திரும்­பி­னர்.

இவர்­கள் தவிர, இந்­தி­யா­வி­லி­ருந்­தும் பங்­ளா­தே­ஷில் இருந்­தும் வந்த மாண­வர் வருகை அட்­டை­தா­ரர்­கள் மூவ­ரும் இந்­தியா, பங்­ளா­தேஷ், இந்­தோ­னீ­சியா, பிலிப்­பீன்ஸ் ஆகிய நாடு­களில் இருந்து வந்த வேலை அனு­மதி (வொர்க் பெர்­மிட்) அட்­டை­தா­ரர்­கள் எழு­வ­ரும் இந்த எண்­ணிக்­கை­யில் அடங்­கு­வர்.

வேலை அனு­மதி அட்­டை­தா­ரர்­களில் ஐவர் வெளி­நாட்டு இல்­லப் பணிப்­பெண்­கள்.

குறு­கிய கால வருகை அட்­டை­தா­ரர்­கள் நால்­வ­ரும் 26 பேரில் அடங்­கு­வர். இவர்­களில் இரு­வர் சிங்­கப்­பூ­ரில் உள்ள தங்­க­ளது குடும்ப உறுப்­பி­னர்­க­ளைக் காண இந்­தி­யா­வி­லி­ருந்து வந்­த­வர்­கள்.