அரசாங்க நிதி மோசடி: மூளையாகச் செயல்பட்ட ஆடவருக்கு தண்டனை

அரசாங்க நிதி மோசடி: மூளையாகச் செயல்பட்ட ஆடவருக்கு தண்டனை

2 mins read
df27de66-2f84-4df0-8ff9-9fab258177db
-

மூன்றாண்டு சிறை, $295,272 அபராதம்

அர­சாங்க உத­வித் திட்ட நிதியை மோசடி மூலம் பெற சூழ்ச்சி செய்து மூளை­யா­கச் செயல்­பட்­ட­தற்­காக 46 வயது ஆட­வர் ஒரு­வ­ருக்கு மூன்­றாண்டு சிறைத் தண்­ட­னை­யும் $295,272 தண்­டமும் நேற்று விதிக்­கப்­பட்­டன. தண்­டத் தொகை­யைச் செலுத்­தத் தவ­றி­னால் கூடு­த­லாக 30 வார சிறைத் தண்­ட­னையை அவர் அனு­ப­விக்க வேண்டி இருக்­கும். எஸ். சந்­தி­ரன் (படம்) என்­னும் அந்த ஆட­வர் மாயா­ஜால வித்தை காட்­டக்­கூ­டி­ய­வர்.

சிங்­கப்­பூர் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யத்­தின் பிஐசி எனப்­படும் உற்­பத்­தித்­தி­றன் மற்­றும் புத்­தாக்க உத­வித் திட்­டத்­தின்­கீழ் மோசடி வழி­யில் பணம் பெற மூன்று பேருக்கு சூழ்ச்சி செய்து உத­வி­ய­தாக இவர் மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டது. மூன்று குற்­றச்­சாட்­டு­

க­ளைக் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சந்­தி­ரன் ஒப்­புக்­கொண்­டார். இவ­ருக்கு எதி­ரான மேலும் 55 குற்­றச்­சாட்­டு­களை நீதி­மன்­றம் வேறொரு தேதி­யில் கையா­ளும்.

உற்­பத்­தித்­தி­ற­னை­யும் புத்­தாக்­கத்­தை­யும் வளர்க்க உண்­மை­யான முத­லீ­டு­களை செய்­யும் நிறு­வ­னங்­க­ளுக்கு அர­சாங்­கம் ரொக்க உதவி அல்­லது வரிக்­க­ழி­வு­களை வழங்­கு­கிறது. ஊழி­யர்­க­ளுக்­கான பயிற்சி, தக­வல் தொழில்­நுட்­பம், தானி­யக்க இயந்­தி­ரம் போன்­ற­வற்­றில் செய்­யப்­படும் முத­லீ­டு­களை இதற்கு உதா­ர­ண­மா­கக் குறிப்­பி­ட­லாம். இத்­திட்­டத்­தின்கீழ் ரொக்க உதவி பெறத் தகுதி பெறு­வ­தற்கு நிறு­வ­னங்­கள் குறைந்­த­பட்­சம் மூன்று உள்­ளூர் ஊழி­யர்­க­ளைப் பெற்­றி­ருக்க வேண்­டும் என்­ப­தும் நிபந்­த­னை­களில் ஒன்று.

'பேர­டைஸ் கன்­சல்­டன்சி' என்­னும் நிறு­வ­னத்தை நடத்தி வந்த சந்­தி­ரன், திட்­டத்­திற்­குத் தகுதி பெறாத சிலர் ரொக்க உதவி பெற உத­வி­ய­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது. அந்த வகை­யில் கடந்த 2014ஆம் ஆண்டு மகேந்­தி­ரன் ராஜூ என்­ப­வர் ரொக்க உதவி பெற்­றார். எம் மிதுனா என்ற பெய­ரில் நிறு­வ­னத்­தைத் தொடங்க மகேந்­தி­ர­னுக்கு சந்­தி­ரன் உத­வி­னார். அந்­நி­று­வ­னத்­தில் ஊழி­யர் யாரும் இல்லை என்று தெரிந்­தும் போலி­யான கோரிக்கை மூலம் மகேந்­தி­ரன் ரொக்­கம் பெற சந்­தி­ரன் தூண்­டி­ய­தாக அர­சுத் தரப்பு வழக்­க­றி­ஞர் கூறி­னார். இதே வழி­யில் மோச­டி­யாக ரொக்க உதவி பெற இரண்டு பெண்­க­ளுக்­கும் அவர் உதவினார். கடந்த 2017ஆம் ஆண்டு மகேந்­தி­ரன் தண்­டிக்­கப்­பட்­டார். $49,212 தண்­டத்­தொ­கை­யும் அதி­க­பட்­ச­மாக $5,000 அப­ரா­த­மும் செலுத்த அவ­ருக்கு நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது.

அதே­நே­ரம் சாந்தி பெரி­ய­சாமி, கிறிஸ்­டல் பிரியா ராக­வன் என்­னும் இரு பெண்­க­ளுக்கு நீதி­மன்­றம் நிபந்­தனை எச்­ச­ரிக்­கையை விடுத்­த­தாக 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' அறி­கிறது.

மோச­டி­யா­கப் பெற்ற தொகை­யில் பாதியை இம்­மூ­வ­ரும் சந்­தி­ரனுக்­குக் கொடுத்­ததாக அர­சுத் தரப்பு வழிக்­க­றி­ஞ­ரும் சிங்­கப்­பூர் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யத்­தின் வழக்­க­றி­ஞர்­களும் கூறி­னர்.

சந்­தி­ர­னின் குற்­றங்­கள் கண்டு­ பி­டிக்­கக் கடி­ன­மாக இருந்­த­தாக ஆணை­யத்­தின் வழக்­க­றி­ஞர் நோர்­மன் டியோ கூறி­னார். சந்­தி­ரன் தரப்­பில் யாரும் வாதா­ட­வில்லை. தம்மை நம்­பியே குடும்­பம் இருப்­ப­தா­க­வும் சிறை சென்­று­விட்­டால் தமது அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளுக்கு நிதி ஆத­ரவு இருக்­காது என்­றும் நீதி­ப­தி­யி­டம் சந்­தி­ரன் தெரி­வித்­தார்.

$200,000 பிணை அவ­ருக்கு அனு­ம­திக்­கப்­பட்­டது. தமக்கு எதி­ரான தண்­ட­னை­களை எதிர்த்து மேல்­மு­றை­யீடு செய்ய அவர் எண்­ணி­யுள்­ள­தாக அறி­யப்­ப­டு­கிறது.