வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் தங்கியுள்ள கிட்டத்தட்ட 950,000 குடும்பங்கள், பொருள் சேவை வரிகளுக்கான தள்ளுபடியைப் பெறவுள்ளனர். தற்போதைய நிச்சயமற்ற சூழலில் இந்தக் கூடுதல் தள்ளுபடி, சிங்கப்பூர் 2021 வரவு செலவுத் திட்டத்தின் குடும்பங்கள் ஆதரவுத் திட்டத்தில் அங்கம் வகிக்கிறது.
ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு யூசேவ் மற்றும் யூசேவ் சிறப்புக் கட்டணத்தின் மூலம் வழங்கப்படும் இந்தச் சலுகைகள், மாதாந்திர பயனீட்டுக் கட்டணங்களிலிருந்து கழிக்கப்படும்.
ஜிஎஸ்டி-இயூசேவ் தள்ளுபடிகள் நான்கு சுற்றுகளாகக் கொடுக்கப்படும்.

