வெனிஸ் கட்டடக் கலை காட்சியில் சிங்கப்பூரின் 16 படைப்புகள்

1 mins read
4a70c934-2979-4a43-bd7a-55d8959968ab
சிங்கப்பூர் காட்சிப்படுத்தும் சில கட்டடங்கள். படங்கள்: டிபி ஆர்க்கிடெக்ஸ், என்யுஎஸ்-சிங்ஹுவா. -

வெனிஸ் நகர கட்­ட­டக் கலை கண்­காட்­சி­யில் சிங்­கப்­பூ­ரின் 16 படைப்­பு­கள் காட்­சிப்­ப­டுத்­தப்­ப­ட­ வி­ருக்­கின்­றன.

சிங்­கப்­பூ­ருக்கு ஒதுக்­கப்­பட்ட அரங்­கத்­தில் மெய்­நி­கர் காட்சி வழி­யாக சிங்­கப்­பூர் கட்­ட­டக் கலை­யின் சிறப்­பு­கள் காட்­டப்­படும்.

இவ்­வாண்­டின் கருப்­பொ­ருள் "உற­வு­க­ளைக் காட்­டும் கட்­ட­டக் கலை என்று பெய­ரி­டப்­பட்­டுள்­ளது.

என்­யு­எஸ்-சிங்­ஹுவா வடி­வ­மைப்பு ஆய்­வில் ஈடு­பட்­டுள்ள சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக் கழ­கத்­தின் டாக்­டர் ஷாங் யேவும் சிங்­கப்­பூர் தொழில்­நுட்ப வடி­வ­மைப்­புப் பல்­க­லைக் கழ­கத்­தின் டாக்­டர் ஜெஃப்ரி சானும் நகர்ப்­புற காட்­சி­களை படைக்­கின்றனர்.

to-gather.sg எனும் இணை­யத் தளத்­துக்­குச் செல்­வோர் கற்­பனை நக­ரங்­க­ளின் காட்­சி­களில் மூழ்­க­லாம்.

தெம்­ப­னிஸ் ஹப்­பும் காட்­சிப்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

1967ஆம் ஆண்­டில் தொடங்­கப்­பட்­ட­தி­லி­ருந்து டிபி ஆர்க்­கி­டெக்ட்ஸ், சிங்­கப்­பூ­ரின் முக்­கிய கட்­ட­டங்­களை வடி­வ­மைத்­துள்­ளது. அவற்­றில் ஒன்று தெம்­ப­னிஸ் ஹப். மக்­கள் கழ­கம் இதன் மேம்­பாட்­டுக்கு தலைமை தாங்­கி­யி­ருந்­தது.

கட்­ட­டக் கலை­யைப் பகிர்ந்­து­கொள்­ளும் நோக்­கத்­தில் இந்­தக் கட்­ட­டம் கட்­டப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரின் கட்­ட­டக் கலை­யின் சிறப்­பைக் காட்­டும் வகை­யில் மொத்­தம் 16 படைப்­பு­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன.