அறைகலன் நிறுவன கணினியில் ஊடுருவல்: வாடிக்கையாளர்களின் விவரங்கள் கசிவு

2 mins read
3fd1a507-3f55-41cb-bcf7-6415e96b0d66
-

'ஹைவ்' (Vhive) என்ற உள்­ளூர் அறை­க­லன் சில்­லறை வர்த்­தக நிறு­வ­னத்­தின் கணி­னி­யில் ஊடு­ரு­வப்­பட்டு வாடிக்­கை­யா­ளர்­க­ளிள் தக­வல்­கள் கசிந்து இருக்­கின்­றன.

தொலை­பேசி எண்­கள், முக­வரி­கள் வெளி­யாகி இருப்­பது பற்றி அதி­கா­ரி­கள் புலன்­வி­சா­ரணை நடத்தி வரு­கி­றார்­கள். இந்த விவ­கா­ரம் தொடர்­பில் புகார் தாக்­க­லாகி இருப்­ப­தாக போலிஸ் பேச்­சா­ளர் உறு­தி­படக் கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நேற்று தெரி­வித்­தது.

தன்­னு­டைய கணி­னித் தக­வல் சேமிப்பு முறை­யில் மார்ச் 23ஆம் தேதி சட்­ட­வி­ரோத ஊடு­ரு­வல் இடம்­பெற்­ற­தாக ஹைவ் நிறு­வ­னம் மார்ச் 29ஆம் தேதி ஃபேஸ்புக்­கில் தெரி­வித்­தது. அது பற்றி போலிஸ் உள்­ளிட்ட பல தரப்புகளு­டன் தான் செயல்­பட்டு வரு­வ­தா­க­வும் அது கூறி­யது.

வாடிக்­கை­யா­ளர்­க­ளின் பெயர்­களும் அவர்­க­ளின் முக­வ­ரி­களும் மின்­னஞ்­சல் முக­வரி, கைபேசி எண்­களும் வெளியே கசிந்­து­விட்­ட­தாக அந்த நிறு­வ­னம் தெரி­வித்­தது. இருந்­தா­லும் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் நிதி தொடர்­பான தக­வல்­கள், அடை­யாள எண்­கள் எது­வும் அம்­ப­ல­மா­க­வில்லை என்­றும் அது கூறி­யது.

ஹைவ் நிறு­வ­னத்­தில் பொருட்­களை வாங்­கி­ய­தன் தொடர்­பி­லான நிதிப் பதி­வு­கள் அனைத்­தும் வேறு ஒரு கணி­னி­யில் இருந்­த­தா­க­வும் அந்­தக் கணினி ஊடு­ரு­வப்­ப­ட­வில்லை என்­றும் நிறு­வ­னம் தெரி­வித்­தது.

இந்­தச் சம்­ப­வத்­திற்­காக மனப்­பூர்­வ­மாக வருத்­தம் தெரி­வித்­துக்­கொண்ட நிறு­வ­னம், உட­னடி உதவி தேவை எனில் உதவ தாங்­கள் தயா­ராக இருப்­ப­தா­க­வும் வாடிக்­கை­யா­ளர்­களி­டம் தெரி­வித்­துள்­ளது.

இத­னி­டையே, இந்­தச் சட்­ட­விரோத ஊடு­ரு­வ­லுக்குத் தானே பொறுப்பு என்று 'ஆல்­டோஸ்' என்ற ஊடு­ரு­வல் குழு­மம் தெரி­வித்­தது. இது பெரும்­பா­லும் தென்­கிழக்கு ஆசி­யா­வில் செயல்­ப­டு­கிறது.

ஒன்­பது நாட்­களில் மூன்று தடவை ஹைவ் நிறு­வன கணி­னிக்குள் தான் நுழைந்­த­தா­க­வும் 300,000க்கும் மேற்­பட்ட வாடிக்­கை­யா­ளர்­கள் தொடர்­பான தக­வல்­களைத் திரு­டி­விட்­ட­தா­க­வும் ஏறக்­கு­றைய 600,000 பட்­டு­வாடா பதி­வு­க­ளைக் கைப்­பற்­றி­விட்­ட­தா­க­வும் அந்­தக் குழு­மம் தெரி­வித்­தது.

ஹைவ் நிறு­வ­னத்­திற்குத் தான் பிறப்­பித்­துள்ள கோரிக்­கை­களை அந்த நிர்­வா­கம் நிறை­வேற்­றும் வகை­யில் நாள்­தோ­றும் 20,000 வாடிக்­கை­யா­ளர்­க­ளின் விவ­ரங்­கள் வெளி­யி­டப்­போ­வ­தா­க­வும் அது கூறி­ உள்­ளது.

இத­னி­டையே, வல்­லு­நர்­க­ளின் ஆலோ­ச­னை­க­ளின்­படி பல பாது­காப்பு ஏற்­பா­டு­க­ளைத் தான் செய்து வரு­வ­தாக ஹைவ் நிறு­வ­னம் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு உறுதி கூறி­யது.