சிஓஇ நீட்டிப்புகள் குறைந்தன: எல்டிஏ

1 mins read
2c5e8683-9044-439f-b333-8fa2a83fa356
-

வர்த்தக வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் உட்பட, வாகன உரிமைச் சான்றிதழின் (சிஓஇ) நீட்டிப்புக்கான விண்ணப்பங்கள் கடந்த பத்து ஆண்டுகளில் முதல்முறையாக கடந்தாண்டு வீழ்ச்சி கண்டன. அப்படி

என்றால் அடுத்து வரும் புதிய சிஓஇ விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய சாத்தியம் உள்ளது என்று மோட்டார் தொழில்துறை கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நிலப் போக்குவரத்து ஆணையத்தின் புள்ளிவிவரத்தின்படி, 2019ல் 41,777 என்றிருந்த சிஓஇ நீட்டிப்பு விண்ணப்பங்கள் கடந்த ஆண்டில் 50%க்கு மேல் சரிந்து, 20,071 ஆயின.

"இந்தச் சரிவு, வாடிக்கை

யாளர்கள் அதிக காலத்துக்கு வாகனங்களைத் தக்கவைத்துக்கொள்ளும் போக்கு மாறி வருவதைக் காட்டுகிறது. இப்போக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்றார் ஹியுணேடே கார்களை விற்பனை செய்யும் கொமோக்கோ நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் பிரிவின் இயக்குநர் திருவாட்டி டிரேசி டியோ.