ஆடவர் ஒருவரைக் கொன்றதாக 49 வயது ஆடவர் மீது கொலைக் குற்றச்சாட்டு

ஆடவர் ஒருவரைக் கொன்றதாக 49 வயது ஆடவர் மீது கொலைக் குற்றச்சாட்டு

1 mins read
a32b3fef-5d05-491a-814e-0a48a9c36f5b
பிடோக் ரெசர்வோர் ரோட்டில் இருக்கும் இந்த வீட்டிற்கு வந்த போலிசார், ஆடவர் ஒருவர் அசைவின்றிக் கிடந்ததைக் கண்டனர். படம்: சாவ்பாவ் -

பிடோக் ரெசர்வோர் ரோட்டில் இருக்கும் குடியிருப்பு ஒன்றில் கடந்த வார இறுதியில் ஆடவர் ஒருவரைக் கொலை செய்ததாக நயிங் லின், 49, எனும் ஆடவர் மீது இன்று (ஏப்ரல் 5) நீதிமன்றத்தில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த சனிக்கிழமை ஒத்த வயதுடைய மற்றொருவரை அவர் கொலை செய்ததாகக் கூறப்பட்டது. ஆனால், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை.

கடந்த சனிக்கிழமை காலை 10.15 மணியளவில் சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலிசார், சம்பவ இடத்துக்குச் சென்றபோது அங்கு ஆடவர் ஒருவர் அசைவின்றிக் கிடந்ததைக் கண்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு நேரத்தில் அந்த வீட்டில் ஆடவர் இருவர் சண்டையிட்டுக்கொண்டது கேட்டதாக அந்தப் பகுதி வீடு ஒன்றில் பணியாற்றும் இல்லப் பணிப்பெண் திருவாட்டி யாட்டோ, 32, குறிப்பிட்டார்.

நையிங் லின் தற்போது மத்திய போலிஸ் பிரிவில் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இம்மாதம் 12ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும். கொலைக்குற்றம் நிரூபிக்கப்படுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்