சட்டவிரோத கார் பந்தயம்: கூடுதல் அபராதம், சிறை

பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்ள சாலைப் போக்­கு­வ­ரத்­துச் சட்­டத் திருத்த மசோதா சட்­ட­மானால், சட்­ட­வி­ரோத கார் பந்­த­யத்தை பிர­ப­லப்­ப­டுத்­து­வோர் அல்­லது அதில் பங்­கேற்­போர் அதி­க­மான அப­ரா­தம், இரண்டு மடங்கு கட்­டாய சிறைத் தண்­டனை போன்­ற­வற்றை எதிர்­கொள்­வர்.

சாலை­யில் அச்­சு­றுத்­தும் வகை­யில் நடந்­து­கொண்ட குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் வாகன ஓட்­டி­களை வாக­னம் ஓட்­டு­வதிலிருந்து தகுதி நீக்­கம் செய்ய நீதி­மன்­றங்­க­ளுக்கு கூடு­தல் அனு­மதி வழங்­கப்­படும்.

கடந்த ஆண்டு சட்­ட­வி­ரோத வேக பந்­தய சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­த­தைத் தொடர்ந்து, சாலை பாதுகாப்பை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்ட சாலைப் போக்­கு­வ­ரத்­துச் சட்­ட திருத்த மசோ­தா­வில் இடம்­பெற்­றுள்ள மாற்­றங்­கள் இவை.

தற்­போது, ​​சட்­ட­வி­ரோத ஓட்­டப்­பந்­தய குற்­ற­வா­ளி­கள் அப­ரா­தம், கட்­டாய சிறை, சம்­பந்­தப்­பட்ட வாக­னத்தைப் பறி­மு­தல் செய்­யப்­ப­டு­தல் ஆகிய தண்­ட­னை­களை எதிர்­கொள்­கின்­ற­னர்.

முதல் முறை குற்­ற­வா­ளி­க­ளுக்கு ஆறு மாதங்­கள் வரை சிறை, $1,000 முதல் $2,000 வரை அப­ரா­தம் விதிக்­கப்­ப­ட­லாம். மீண்­டும் குற்­றம் புரி­வோ­ருக்கு ஓராண்டு வரை சிறை, $2,000 முதல் $3,000 வரை அப­ரா­தம் விதிக்­கப்­ப­ட­லாம்.

சட்­ட திருத்­தங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டால், முதல்­முறை குற்­ற­வாளி­கள் அதி­க­பட்­சம் $5,000 அப­ரா­தத்­தை­யும் ஓராண்டு வரை சிறைத்­தண்­டனையையும் அனு­ப­விக்க நேரி­டும். மீண்­டும் குற்­றம் புரி­வோ­ருக்கு $10,000 வரை அப­ரா­தம், இரண்டு ஆண்­டு­கள் வரை சிறைத்­தண்­டனை விதிக்­கப்­படும்.

எனி­னும், இந்த திருத்­தங்­கள் சட்­ட­வி­ரோத பந்­தய குற்­றங்­களில் தற்­போ­தைய வாகன பறி­மு­தல் முறை­யை­யும் மாற்­றும். சட்­ட­வி­ரோத ஓட்­டப்­பந்­த­யத்­தில் ஈடு­படும் வாகனம் இனி தானா­கவே பறி­மு­தல் செய்­யப்­ப­டாது. குற்­ற­வாளி, வாகன உரி­மை­யா­ளர் அல்­லா­த­பட்­சத்­தி­லும் உரி­மை­யா­ள­ரின் அனு­ம­தி­யின்றி வாக­னம் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தா­லும் அது பறி­மு­தல் செய்­யப்­ப­டாது.

இது ஆபத்­தான வாக­னம் ஓட்­டு­தல் போன்ற பிற மோச­மான குற்­றங்­க­ளுக்கு ஏற்ப பறி­மு­தல் நடை­மு­றை­யைக் கொண்டு வரு­கிறது.

பிப்­ர­வ­ரி­யில் தஞ்­சோங் பகா­ரில் ஐந்து பேர் கொல்­லப்­பட்ட அபா­ய­க­ர­மான அதி­வேக கார் விபத்து, சட்­ட­வி­ரோத ஓட்­டப்­பந்­த­யத்­தில் சிக்­கி­ய­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிப்பு ஆகி­ய­வற்றை அடுத்து இந்த பரிந்­து­ரைக்­கப்­பட்ட திருத்­தங்­கள் வந்­துள்­ளன.

கடந்த ஓராண்­டில் மட்­டும், 26 பேர் சட்­ட­வி­ரோத கார் பந்­த­யத்­தில் ஈடு­பட்­ட­தா­கப் போக்­கு­வ­ரத்­து போலிஸ் தெரி­வித்­தது. 2015 ஆம் ஆண்டுமுதல் 2019ஆம் ஆண்டு வரை, 17 பேர் இக்­குற்­றத்­தைப் புரிந்­துள்­ள­னர்.

சாலை­யில் போக்­கு­வ­ரத்து சம்­ப­வங்­களில் நீதிக்கு இடை­யூறு விளை­விப்­பது, மோட்­டார் சைக்­கிள் ஓட்­டி­கள், பின்­னால் அமர்ந்­துள்ள பயணி தலைக்­க­வ­சம் அணி­வதை உறுதி செய்­யத் தவ­று­வது போன்­ற­வற்­றை­யும் தண்­ட­னைக்­கு­ரிய குற்றங்­க­ளாக மசோதா பரிந்­துரைத்துள்­ளது.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று தாக்­கல் செய்­யப்­பட்ட இந்­தச் சட்­ட திருத்­தம் சாலை­க­ளைப் பாது­காப்­பாக வைத்­தி­ருக்­கும் நோக்­கம் கொண்­டவை என்று உள்­துறை அமைச்சு தெரி­வித்­தது.

அனு­ம­திக்­கப்­பட்ட வேக வரம்­பைத் தாண்டி வாக­னம் ஓட்­டும் குற்­றச்­செ­ய­லுக்­கான அப­ரா­த­மும் சிறைத் தண்­ட­னை­யும், ஆபத்­தான வகை­யில் வாக­னத்­தைச் செலுத்தி உயிர் ஆபத்தை ஏற்­ப­டுத்­தும் தண்ட னைக்கு நிக­ராக அதி­க­ரிக்­கப்­படலாம்.

சாலை விபத்து தொடர்­பான குற்­றங்­க­ளைப் புரிந்த ஓட்­டு­ந­ருக்குப் பதி­லா­கப் பழியை ஏற்­றுக்­கொள்­ளும் ஓட்­டு­நர்­கள் மீதும் கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

அத்­த­கைய ஓட்­டு­நர்­கள், வாக­னம் ஓட்­டு­வ­தி­லி­ருந்து தடை செய்­யப்­ப­டக்­கூ­டும் என்­றும் உள்­துறை அமைச்சு தெரி­வித்­தது.

மேலும், சாலைப் போக்­கு­வ­ரத்து சட்­டம், விரை­வுப் போக்­கு­வ­ரத்து அமைப்பு சட்­டத்­தில் பரிந்­து­ரைக்­கப்­பட்ட திருத்­தங்­கள் போலிஸ் அதி­கா­ரி­களுக்­கும் ஏனைய "மூத்த அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட நபர்­க­ளுக்­கும்" ​​பொது போக்­கு­வ­ரத்து பய­ணி­க­ளி­டம் விரைந்து சோதனை மேற்­கொள்ள அதி­கா­ரம் வழங்­கும். நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்ட மசோ­தா­வின்­படி, இது தனி­ந­பர்­க­ள் அணிந்துள்ள வெளிப்­புற ஆடை­கள் மீது விரை­வாக கைக­ளால் நடத்­தப்­படும் சோத­னை­யா­கும்.

அத்­த­கைய மூத்த அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட நபர்­களில் சீரு­டை­யில் இருக்­கும் துணை போலிஸ் அதி­கா­ரி­கள், ரயில் அல்­லது பேருந்து நடத்­து­நர்­க­ளால் நிய­மிக்­கப்­படும் பாது­காப்பு அதி­கா­ரி­கள் அடங்­கு­வர். இத்­த­கைய சோத­னை­களுக்கு மறுப்புத் தெரிவிக்கும் பய­ணி­கள் பேருந்து, ரயில், பேருந்து நிலை­யம் அல்­லது ரயில்வே வளா­கத்தை விட்டு வெளி­யே­றும்­படி கேட்டுக் கொள்ளப்பட­லாம், மேலும் $1,000 வரை அப­ரா­தம் விதிக்­கப்­ப­ட­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!