வல்லுநர்கள் கருத்து: பொதுவாக திருக்கை மீன்கள் சாதுவானவை

கடற்­க­ரைக்­குச் சென்ற இரண்டு பேரைத் திருக்கை மீன் கொட்டி­விட்­ட­தாகத் தெரி­விக்­கப்­பட்­டதை அடுத்து கடற்­கரை சுற்­றுக்­கா­வல் அதி­கா­ரி­கள் பாதிக்கப்பட்டவர் களுக்கு மார்ச் 28ஆம் தேதி முதலு­தவி அளித்­த­தாக செந்­தோசா மேம்­பாட்­டுக் கழ­கத்­தின் பேச்­சா­ளர் நேற்று உறு­திப்­ப­டுத்­தி­னார்.

செந்­தோ­சா­வில் உள்ள தஞ்­சோங் கடற்­க­ரைக்கு மார்ச் 28ஆம் தேதி குடும்­பத்­து­டன் சென்­றி­ருந்த பெஞ்­ச­மின் கியோல்­மான் என்பவரைத் திருக்கை மீன் கடித்து ­விட்­டது.

அதை­ய­டுத்து சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னை­யில் மூன்று நாட்­கள் அவர் சிகிச்சை பெற்­றார். அவர் தனக்கு ஏற்­பட்ட அனு­ப­வம் பற்றி ஃபேஸ்புக்­கில் விளக்கி இருந்­தார்.

இத­னி­டையே, சிங்­கப்­பூரை சுற்றி­லும் உள்ள கடற்­ப­கு­தி­யில் திருக்கை மீன்­கள் காணப்­ப­டு­வது வழ­மை­யான ஒன்­று­தான் என்­றும் பொது­வாக அவை சாது­வா­னவை என்­றும் வல்­லு­நர்­கள் கூறினர்.

பொதுவாகவே உயிரினங்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ளவே தாக்குதலில் ஈடுபடும் என்று லீ கோங் சியான் இயற்கை வரலாற்று அருங்காட்சிக் கூடத்தைச் சேர்ந்த டாக்டர் டான் ஹியோக் ஹுய் என்ற வல்லுநர் கூறினார்.

திருக்கை மீன்­கள் சதுப்பு நிலம் மற்­றும் கட­லோரப் பகு­தி­க­ளி­லும் பவ­ளப்­பாறை மற்­றும் ஆழ்­க­டல் பகு­தி­க­ளி­லும் காணப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்டது. திருக்கை மீன்­பொது­வாக அமைதியானது என்றும் அதற்குத் தொல்லை கொடுத்­தாலொ­ழிய அது யாரை­யும் தாக்காது என்றும் சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் கடல் உயிரி­யல் வல்­லு­நர் ஹுவாங் டான்­வெய் கூறி­னார்.

ஆகை­யால் கட­லில் இறங்­கும்­போது மக்­கள் மிக­வும் கவ­ன­மாக இருக்க வேண்­டும். திருக்கை மீன்­கள் பதுங்கி இருக்­கக்­கூ­டிய இடங்­களை அவர்­கள் தவிர்த்­துக் கொள்ளவேண்­டும் என்று ஆலோ­சனை தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!