கார்ப்பரல் கோக் யுவன் சின், 22, கடந்த 2018ஆம் ஆண்டு பகடிவதை சம்பவத்தால் உயிரிழந்ததன் தொடர்பில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள், உயர் நீதிமன்ற ஆணைப்படி, அவர்கள் மீது முன்பு சுமத்தப்பட்ட கடும் குற்றச்சாட்டுகளையே எதிர்நோக்க உள்ளனர்.
கார்ப்பரல் கோக் யுவன் சின்னுக்கு மற்ற சேவையாளர்கள் பகடி வதை மூலம் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் விதத்தில் மேற் கொண்ட கடுமையான நட
வடிக்கைகளில் துவாஸ் வியூ தீயணைப்பு நிலையத்தின் முன்னாள் வேலைமுறைப் பட்டியல் அதிகாரி கென்னத் சோங் சீ பூன், 40, அவரது உதவியாளர் நஸான் முகமது நாஸி, 42, ஆகிய இருவரும் வேண்டுமென்றே உதவியதாக நேற்று நீதிபதி சீ கீ ஊன் குறிப்பிட்டார்.
கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதத்தில் அந்தத் தீயணைப்பு நிலையத்தில் நிகழ்ந்த பகடிவதை சம்பவத்தின்போது நீரேற்று கிணற்றில் மூழ்கி கார்ப்பரல் கோக் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கவனக் குறைவாக நடந்துகொண்டதாக குற்றம் நிரூபிக்கப்பட்டதை
யடுத்து அவ்விரு அதிகாரிகளுக்கும் கடந்த ஆண்டு செப்டம்பரில் 10 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அதிகாரிகள் இருவரும் 'மிகவும் கவனக் குறைவாக' இருந்ததாக மூத்த மாவட்ட நீதிபதி ஓங் ஹியன் சன் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், அதிகாரிகள் இருவரின் மீதும் அதிக கடுமையான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது என நீதிபதி தவறான முடிவுக்கு வந்தார் என்று நேற்று நீதிபதி சீ குறிப்பிட்டார். அந்த அதிகாரிகளின் மீது முன்பு சுமத்தப்பட்ட கடும் குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு
இடமில்லாத வகையில் நிரூபிக்கப்பட்டதையும் நீதிபதி சுட்டிக் காட்டினார்.
அரசுத் தரப்பு மேல்முறை
யீட்டுக்கு அனுமதி அளித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
மேலும், தீர்ப்பு மற்றும் தண்டனை குறைப்பு முறையீடு போன்றவை பிறகு விசாரிக்கப்படும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
கடுமையான காயம் விளைவித்த செயலுக்குத் துணைபோனதற்காக அந்த அதிகாரிகளுக்கு நான்காண்டுகள் வரை சிறைத் தண்டனை, $10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.