போலிஸ் நடவடிக்கை; 156 பேரிடம் விசாரணை

போலிஸ் நடவடிக்கை; 156 பேரிடம் விசாரணை

1 mins read
75fffa58-e1a8-49d7-9d7e-e7b45d0b4add
-

போதைப்­பொ­ருள் தொடர்­பான குற்­றங்­கள், சூதாட்­டம், கடன் முதலை பிரச்­சினை, மோசடி என பல்­வேறு குற்­றங்­க­ளின் தொடர்­பில் 156 சந்­தேக நபர்­கள் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

ஒரு வார கால­மாக நடை­பெற்ற போலிஸ் நட­வ­டிக்­கை­யில் இவர்­கள் பிடி­பட்­ட­தாக நேற்று போலி­சார் தெரி­வித்­த­னர்.

பிடி­பட்­ட­வர்­களில் 132 பேர் ஆட­வர்; 24 பேர் பெண்­கள். சந்­தேக நபர்­கள் 17 முதல் 81 வயது வரை­யி­லா­ன­வர்­கள் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு, குடி­நு­ழைவு சோத­னைச்­சா­வடி ஆணை­யம், சிங்­கப்­பூர் சுங்­கத்­துறை ஆகி­ய­வற்­றின் ஆத­ர­வு­டன் ஜூரோங் போலிஸ் பிரி­வின் தலை­மை­யில் அதி­கா­ரி­கள் இந்த தேடுதல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­னர்.

ஜூரோங் வெஸ்ட், துவாஸ், சுவா சூ காங், புக்­கிட் பாஞ்­சாங், புக்­கிட் பாத்­தோக் ஆகிய இடங்­களில் இந்த நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்­டன.

ஐந்து ஆட­வர்­கள் சுங்­கச் சட்­டம் மற்­றும் குடி­நு­ழைவு சட்­டங்­க­ளின் கீழ் கைது செய்­யப்­பட்­ட­னர்.

புகை­யிலை, வரி செலுத்­தப்

­ப­டாத சிக­ரெட் பொட்­ட­லங்­கள் போன்­ற­வை­யும் பிடி­பட்­டன.