தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புளோக்கின் கீழ்த்தளத்தில் இளம்பெண்கள் இருவர் மரணம்

2 mins read
f95fabf0-13bc-4d95-8131-af0647c7fe8a
-

புளோக் 143 லோரோங் 2 தோ பாயோ­வில் கடந்த சனிக்­கி­ழமை இரவு பதின்ம வயதுப் பெண்­கள் இரு­வர் மாண்­டு­கி­டந்­த­னர்.

இந்த இயற்கைக்கு மாறான மர­ணம் குறித்து அன்று இரவு 10.02 மணிக்கு போலி­சுக்கு தக­வல் கிடைத்­தது.

புளோக்­கின் கீழ்த்­த­ளத்­தில் 15, 16 வய­துகளில் இரு பெண்­கள் அசை­வின்­றிக் கிடந்­த­னர். அவ்­வி­ரு­வ­ரும் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­து­விட்­டதை சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் மருத்­துவ உத­வி­யா­ளர் ஒரு­வர் உறு­திப்ப­டுத்­தி­னார்.

அவர்­க­ளின் மர­ணத்தில் சந்­தே­கப்­ப­டும்­ப­டி­யாக எது­வும் இல்லை எனத் தெரி­விக்­கப்­பட்­டது. இது­கு­றித்த போலிஸ் விசா­ரணை தொடர்­கிறது.

அந்த புளோக்­கில் வசிக்­கும் திரு ஸாங் என்­ப­வர், தாம் வீடு திரும்­பிக்­கொண்டு இருந்­த­போது அந்த புளோக்­கின் கீழ்த்­த­ளத்­தில் போலிஸ் அதி­கா­ரி­கள் இருந்

­த­தைக் கண்­ட­தாக வான்­பாவ் சீன நாளி­த­ழி­டம் கூறி­னார்.

"உயி­ரி­ழந்­த­வர்­களில் ஒரு­வர் கறுப்­பு­நிற டீ-சட்­டை­யும் ஜீன்ஸ் காற்­சட்­டை­யும் அணிந்­தி­ருந்­தார். அவ­ரது தலை­யைச் சுற்றி ரத்தம் வெள்­ளம்­போல் காணப்­பட்­டது," என்­றார் திரு ஸாங், 40.

உயி­ரி­ழந்த அவ்­விரு பெண்­களும் நெருங்­கிய நண்­பர்­கள் என்­றும் அந்த புளோக்­கில் இருந்து அவ்­வி­ரு­வ­ரும் ஒரே நேரத்­தில் விழுந்­த­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

அவ்­வி­ரு­வ­ரும் ஒரே மாதி­ரி­யான கைய­ணி­களை (பிரேஸ்லட்) அணிந்­தி­ருந்­த­னர்.

அந்த அணி­க­லன்­களை போலி­சார் விசா­ர­ணைக்­காக கொண்டு சென்­ற­னர்.

மாண்ட இளம்­பெண்­க­ளின் சட­லங்­கள் நேற்று முன்­தி­னம் அதி­காலை 3 மணி­ய­ள­வில் அகற்­றப்­பட்­ட­தாக வான்­பாவ் நாளி­தழ் தெரி­வித்­தது.

உதவி தேவைப்படுவோர் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களை நாடலாம்:

சமாரிட்டன்ஸ் ஆஃப் சிங்கப்பூர்: 18002214444

சிங்கப்பூர் மனநலக் கழகம்: 18002837019

சில்வர் ரிப்பன்: 63861928

டிங்கிள் ஃபிரண்ட்: 18002744788