தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்க நிறுவனத்தின் 3வது தரவு மையம் திறப்பு

1 mins read
2dc20763-afce-4f70-9ba2-d1755431f4ab
-

அமெ­ரிக்­கா­வைத் தள­மா­கக் கொண்ட 'டிஜிட்­டல் ரியால்ட்டி' நிறு­வ­னம், சிங்­கப்­பூ­ரில் தனது மூன்­றா­வது, ஆகப் பெரிய தரவு மையத்­தைத் திறந்­துள்­ளது.

டிஜிட்­டல் லோயாங் II அல்­லது SIN12 என அழைக்­கப்­படும் அந்த ஐந்து தள, 50 மெகா­வாட் மையம், கட்­டட, கட்­டு­மான ஆணை­யத்­தின் பசு­மைக் குறி­யீடு பிளாட்­டி­னச் சான்­றி­த­ழைப் பெற்­றுள்­ளது.

மெய்­நி­கர் முறை­யில் நேற்று நடை­பெற்ற அந்­தத் தரவு மையத் திறப்­பு­விழா நிகழ்­வில் தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ கலந்­து­கொண்­டார்.

மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல் வளர்ந்து வரும் நிலை­யில், தனது மின்­னி­லக்­கக் கட்­ட­மைப்பு முடிந்த அள­விற்­குச் சுற்­றுச்­சூ­ழல் ரீதி­யாக நீடித்து நிலைத்­தி­ருப்­ப­தைச் சிங்­கப்­பூர் உறு­தி­செய்­வது முக்­கி­யம் என்று அமைச்சர் லீ கூறினார்.

'டிஜிட்­டல் ரியால்ட்டி' நிறு­வ­னத்­தின் மூன்­றா­வது தரவு மையம், அறி­வார்ந்த முறை­யி­லும் மீள்­தி­றன் கொண்­ட­தா­க­வும் கட்­டப்­பட்­டுள்­ள­தா­க­ அவர் குறிப்­பிட்­டார்.

இத­னி­டையே, சிங்­கப்­பூ­ரில் கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக தரவு மையத் துறை வெகு­வே­க­மாக வளர்ச்சி கண்டு வரு­வ­தாக வர்த்­தக, தொழில் அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இந்­தக் கால­கட்­டத்­தில், மொத்­தம் 768 மெகா­வாட் தக­வல் தொழில்­நுட்­பக் கொள்­தி­ற­னு­டன் கூடிய 14 தரவு மையங்­க­ளைக் கட்டுவதற்கு அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்ளது.