தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொங்கோலில் உள்ள 'கேஎஃப்சி' உணவகம் இரு வாரங்களுக்கு மூடல்; $800 அபராதம்

1 mins read
f266a7f4-79ed-481e-a127-6380f57403dd
சுத்தமில்லாத அல்லது வேறு பொருள் கலந்த உணவை விற்பனை செய்ததற்காக 'கேஎஃப்சி' உணவகம் மூடப்பட்டுள்ளது. படங்கள்: கூகல் வரைபடம், கேஎஃப்சி/ஃபேஸ்புக் -

சுத்தமில்லாத அல்லது வேறு பொருள் கலந்த உணவை விற்பனை செய்ததற்காக பொங்கோல் வட்டாரத்தில் உள்ள 'கேஎஃப்சி' விரைவு உணவகத்தை இரண்டு வாரங்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

எண் 681 பொங்கோல் டிரைவில் உள்ள 'ஒஏசிஸ் டெரேசஸ்' கடைத்தொகுதியில் செயல்பட்டு வந்த அந்த உணவகம் இந்த மாதம் 19ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த உணவகத்திற்கு $800 அபராதமும் விதிக்கப்பட்டது.

கடந்த ஓராண்டில் அங்கு இதன் தொடர்பில் இரண்டு குற்றங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக உணவு அமைப்பு கூறியது. ஒவ்வொரு குற்றத்திற்கும் தலா 6 குற்றப்புள்ளிகள் விதிக்கப்பட்டன.

ஓராண்டு காலத்தில் 12 அல்லது அதற்கும் அதிகமான குற்றப்புள்ளிகளைப் பெறும் உணவகங்களின் உரிமம் இரண்டு அல்லது நான்கு வாரங்களுக்கு நிறுத்திவைக்கப்படலாம் அல்லது முழுமையாக ரத்து செய்யப்படலாம்.

குறிப்புச் சொற்கள்