சிங்கப்பூரில் நான்கு புதிய சுற்றுலாத்தலங்கள் அறிமுகம்

கொரோனா தொற்றுக் கார­ண­மாக பெரும் பின்­ன­டை­வைச் சந்­தித்­துள்ள சுற்­றுப் பய­ணத் துறையை மேம்­ப­டுத்­தும் நோக்­கில் நான்கு புதிய சுற்­று­லாத் தலங்­கள் அறி­மு­கம் செய்­யப்­பட உள்­ளன. அவற்­றுள், கிளார்க் கீயில் சிலிர்ப்­பூட்­டும் ‘ஸ்லிங்­ஷாட்’ எனும் சாகச விளை­யாட்­டும் டெம்ப்சி வட்­டா­ரத்­தில் அமை­ய­வுள்ள ஐஸ்­கி­ரீம் அருங்­காட்­சி­ய­க­மும் இவ்­வாண்­டி­று­திக்­குள் செயல்படத் தொடங்கும்.

செந்­தோ­சா­வில் அமை­ய­வுள்ள ஸ்கை­ஹெ­லிக்ஸ் அடுத்த ஆண்டு பயன்­பாட்­டுக்கு வரும். சிங்­கப்­பூ­ரின் தெற்கு கடற்­க­ரை­யைப் பார்­வை­யிட உத­வும் விதத்­தில் தரை­யி­லி­ருந்து 35 மீட்­டர் உய­ரத்­துக்கு பார்­வை­யா­ளர்­க­ளைக் கொண்டு செல்­லக்­கூ­டிய சுழ­லும் தோணி­யாக அது இருக்­கும். செந்­தோ­சாவின் கேபிள் கார் நிலை­யத்­துக்கு அரு­கில் இது அமை­யும்.

சாமர்­செட் ஸ்கேட் பார்க், கிலினி ரோடு ஆகி­ய­வற்­றுக்கு இடை­யில் உள்ள காலி இடத்­தில் மற்­றொரு புதிய சுற்­று­லாத் தல­மும் நிறு­வப்­படும் என்று கூறப்­ப­டு­கிறது. கிறிஸ்மசை முன்னிட்டு அங்கு புதிய அலங்காரங்களுக்குத் திட்ட மிடப்படுகிறது.

சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­கத்­தின் ஏற்­பாட்­டி­லான இந்த வரு­டாந்­திர நிகழ்­வான சுற்­றுப்­ப­ய­ணத் தொழில்­துறை மாநாட்­டில் நேற்று இந்த அறி­விப்­பு­கள் இடம்­பெற்­றன. இந்­தப் புதிய திட்­டங்­கள் மூலம் சுற்­றுப்­ப­ய­ணத் துறை பார்­வை­யா­ளர்­களை ஈர்க்க உத­வும் என்று கழ­கத்­தின் தலைமை நிர்­வாகி கீத் டான் குறிப்­பிட்­டார்.

இவ்­வாண்­டின் இரண்­டாம் பாதி­யில் திறக்­கப்­ப­ட­வுள்ள சிங்­கப்­பூர் ஐஸ்­கி­ரீம் அருங்­காட்­சி­ய­கம் அமெ­ரிக்­கா­வுக்கு வெளியே அமைக்­கப்­படும் அத்­த­கைய முதல் அருங்­காட்­சி­ய­க­மா­கும்.

இவ்­வாண்­டின் பிற்­பா­தி­யில் திறக்­கப்­ப­ட­வுள்ள மற்­றொரு சுற்­று­லாத்தலம் ‘ஸ்லிங்­ஷாட்’. இது கிளார்க் கீயில் உள்ள ‘ஜிஎக்ஸ்-5 எக்ஸ்ட்­ரீம் ஸ்விங்’ எனும் சாகச விளை­யாட்­டுத் தளத்­துக்கு அரு­கில் அமை­யும். இதற்கான கட்­ட­ணம் ‘ஜிஎக்ஸ்-5 எக்ஸ்ட்­ரீம் ஸ்விங்’ சாகச விளை­யாட்­டுக்­கான கட்­ட­ணத்­தை ஒத்திருக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

கண்டுபிடிக்க இன்னும் நிறைய இருக்கிறது

Before you head off, have you checked out these hot stories yet?.