‘4ஜி’ தலைவர் தயாராகும்வரை திரு லீ பிரதமர்

நான்காம் தலைமுறை தலைமைத்துவப் பொறுப்பிலிருந்து துணைப் பிரதமர் ஹெங் விலகுவதன் விளைவு

நான்­காம் தலை­முறை அமைச்­சர்­களுக்­கான தலை­வர் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு, தயார்­நி­லையை அடை­யும்­வரை பிர­த­மர் லீ சியன் லூங் தமது பத­வி­யில் நீடிப்­பார் என்று முடி­வாகி­யுள்­ளது. துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட், தமது '4ஜி' தலை­மைப் பொறுப்­பி­லி­ருந்து வில­க­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டதை அடுத்து, நேற்று நடை­பெற்ற செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் பிர­த­மர் பத­வி­யில் திரு லீ நீடிப்­பது குறித்­துத் தெரி­விக்­கப்­பட்­டது.

பொறுப்­பி­லி­ருந்து வில­கு­வ­தாக திரு ஹெங் எடுத்­துள்ள முடிவை நேற்று பிர­த­மர் லீ, "தன்­ன­ல­மற்றது" என்று குறிப்­பிட்­டார்.

"சிங்­கப்­பூ­ரின் சிறந்த செயல்­பாட்டை மன­தில் கொண்டு அவ­ரது செயல்­கள் அமைந்­துள்­ளன. அவ­ரி­டம் உள்ள பொதுச் சேவை உணர்­வும் கடமை உணர்­வுமே, 2011ல் தேர்­த­லில் நிற்­கு­மாறு நான் சொன்­ன­போது அவ­ரைக் களத்­தில் இறங்க வைத்­தது," என்­றார் திரு லீ.

எதிர்­பா­ரா­மல் நடந்த நிகழ்­வு­கள், தங்­க­ளது அடுத்த தலை­முறை திட்­டங்­க­ளுக்கு ஒரு பின்­ன­டைவு என '4ஜி' அறிக்கை குறிப்­பிட்­டி­ருந்­தது. இது தொடர்­பில் பிர­த­மர் லீயும், "4ஜி அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­ட­து­போல், நம் அடுத்த தலை­மு­றைத் திட்­டங்­களில் இது குறிப்­பி­டத்­தக்க ஒரு பின்­ன­டைவே," என்­றார்.

சிங்­கப்­பூர் நாணய ஆணை­யத்­தின் நிர்­வாக இயக்­கு­ந­ராக திரு ஹெங் 2005 முதல் 2011 வரை பணி­யாற்­றி­னார். 2011ல் பொதுத் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தற்­காக பணி­யி­லி­ருந்து வில­கி­னார். அதே ஆண்டு மே 18ஆம் தேதி­யன்று கல்வி அமைச்­ச­ராக திரு லீ அவரை நிய­மித்­தார்.

அடுத்த தலை­மு­றைத் தலை­வர்­கள் குறித்த ஏற்­பா­டு­க­ளைப் புதி­தாக திட்­ட­மி­ட வேண்­டி­யுள்­ள­தால் தங்­க­ளுக்­குக் கூடு­தல் அவ­கா­சம் தேவைப்­ப­டு­வ­தாக '4ஜி' குழு கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

அவர்­க­ளின் நிலையை அறிந்து, புதிய 4ஜி தலை­வர் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு பொறுப்­பேற்­கத் தயா­ரா­கும்­வரை தாம் தொடர்ந்து பிர­த­மர் பத­வி­யில் இருக்க சம்­ம­திப்­ப­தாக திரு லீ குறிப்­பிட்­டார்.

சுகா­தார, பொரு­ளி­யல் நெருக்­கடி மீது தனது உட­னடி கவ­னத்தை அர­சாங்­கம் செலுத்தி வரு­வ­தற்கு இடையே, அடுத்த தலை­மு­றைத் தலை­வர்­கள் குறித்­துத் திட்­ட­மி­டு­வ­தும் ஒரு முக்­கிய பணி என்­றும் அதைத் தள்­ளிப்­போ­டு­வது நல்­ல­தன்று என்­றும் அவர் சொன்­னார்.

"முடிவு எடுப்­ப­தற்கு 4ஜி குழு­வுக்­குச் சில மாதங்­கள் ஆகும் என்று நினைக்­கி­றேன். அடுத்த பொதுத் தேர்­த­லுக்கு முன்­னர் அவர்­கள் ஒரு­மித்த ஒரு முடி­வுக்கு வந்து புதிய தலை­வரை அடை­யா­ளம் கண்­டு­வி­டு­வர் என நம்பு­கி­றேன். தேவை உள்­ள­வரை மட்­டுமே நான் என் பொறுப்­பில் நீடிக்க விரும்­பு­கி­றேன்," என்­றார் திரு லீ.

பிப்­ர­வரி 2022ல் திரு லீ தமது 70வது பிறந்­த­நா­ளைக் கொண்­டாட உள்­ளார்.

இருப்­பி­னும், கொள்­ளை­நோய் வந்து தாக்­கிய பின்­னர், கொவிட்-19 நெருக்­க­டி­யி­லி­ருந்து சிங்­கப்­பூர் மீண்­டு­வ­ரும் பய­ணத்­தில் தாம் உறு­து­ணை­யாக இருப்­பேன் என திரு லீ உறு­தி­ய­ளித்­தார். அதன் பின்­னரே, நாட்­டின் பொறுப்பை அடுத்த தலை­மு­றைத் தலை­வர்­க­ளி­டத்­தில் ஒப்­ப­டைப்­பதாக அவர் குறிப்­பிட்டார்.

இதற்­கி­டையே ஒரு தலை­வ­ரைத் தேர்ந்­தெ­டுப்­பது என்­பது, ஆட்­களைத் தர­வ­ரி­சைப்­ப­டுத்­து­வ­தும் அவர்­களில் யார் சிறந்­த­வர் என்று முடி­வெ­டுப்­ப­தும் அல்ல என்­பதை நேற்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

"ஒரு குழுவை உரு­வாக்­கு­வது, அதை மேம்­ப­டுத்­து­வது, குழு உறுப்­பி­னர்­க­ளி­டையே உற­வு­களை வலு­வாக்­கு­வது முக்கியம். நாள­டை­வில் குழு உறுப்­பி­னர்­களில் எவர் ஒரு­வ­ருக்கு மொத்த குழு­வின் செயல்­தி­றனை முழு­மை­யா­க வெளிக் கொண்டு வர முடி­யுமோ, குழுவில் ஒரு­மைப்­பாடு நில­வச் செய்ய முடி­யுமோ அவரே தலை­வ­ரா­கும் தகுதி­யுடைவர்," என்­றார் அவர்.

அடுத்த பொதுத் தேர்­தல் வரை­யில் போது­மான கால அவ­கா­சம் உள்­ள­தெ­னக் குறிப்­பிட்ட திரு லீ, இந்த விவ­கா­ரம் குறித்து இப்­போதே '4ஜி' குழு குரல் கொடுத்­தது ஏற்­றது என்­றார்.

"சில ஆண்­டு­கள் நீடிக்­கும் ஒரு செயல்­மு­றை­யின் முதல் படி முடிந்து­விட்­டது. அமைச்­சர் தம் பொறுப்­பி­லி­ருந்து வில­கு­கி­றார். இதை­ய­டுத்து, அனை­வ­ருக்­கும் தெரி­விக்­கப்­பட வேண்­டும். பின்­னர், 4ஜி குழு தங்­க­ளது உற­வு­க­ளை­யும் பொறுப்­பு­க­ளை­யும் மாற்­றி­ய­மைத்­துத் திட்­ட­மிட வேண்­டும். அப்­போ­து­தான் பழைய பொறுப்­பி­லேயே சிக்­கி­யி­ருக்­கா­மல் புதி­தாக ஒரு­வர் உதித்­தெ­ழு­வார்," என்­றார் பிர­த­மர்.

வெவ்­வேறு நாடு­களில் வெவ்­வேறு அமைப்­பு­மு­றை­கள் இருப்­ப­தைத் தாம் அறிந்­தி­ருந்­தா­லும் சிங்­கப்­பூ­ரில் உற்­சா­கம் நிறைந்த, இன்­னும் அதிக ஆண்­டு­கள் சேவை­யாற்­றக்­கூ­டிய இளம் அமைச்­சர் பொறுப்­பேற்­பது மட்­டு­மல்ல, ஒரு பிர­த­ம­ரி­ட­மி­ருந்து இன்­னொரு பிர­த­ம­ருக்கு, ஓர் அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து இன்­னோர் அர­சாங்­கத்­திற்­குப் பொறுப்பை ஒப்­ப­டைக்­கும் ஓர் அமைப்­பு­முறை வேண்­டும் என்­றும் சிங்­கப்­பூ­ருக்கு நீண்­ட­கா­லத்­திற்கு ஓர் உயர்­தர அர­சாங்­கத்தை வழங்­கும் ஓர் அமைப்­பு­முறை வேண்­டும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

அதையே தாமும் செய்ய விரும்­பு­வ­தாக திரு லீ குறிப்­பிட்­டார்.

இந்­நி­லை­யில், சவால்­களை எதிர்­கொண்டு நாட்டை முன்­னேற்­றப் பாதை­யில் வழி­ந­டத்த அமைச்­ச­ரவை தொடர்ந்து ஒன்­று­பட்டு செயல்­படும் என்று திரு லீ வலி­யுறுத்­தி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!