பிரெஞ்சு நாட்டின் ஆகாய, விண்
வெளிப் படையின் தலைவரான தளபதி ஃபிலிப் லவிக்ஞ சிங்கப்பூரின் ஆக மதிப்புமிக்க ராணுவ விருதைப் பெற்றுள்ளார். சிங்கப்பூர், பிரெஞ்சு ஆகாயப் படைகளுக்கு இடையே உறவை வலுப்படுத்தியதில் அவரது பங்களிப்புக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
இந்த விருதைத் தளபதி லவிக்ஞவுக்கு வழங்க அதிபர் ஹலிமா யாக்கோப் முடிவு எடுத்தார்.
அவரது தலைமைத்துவத்தின்கீழ் இரு நாட்டு ஆகாயப் படைகளும் ஒன்றிணைந்து ஆளில்லா விமானம், ஆகாய - நில நட
வடிக்கைகள் போன்றவை மேற்கொள்ளப்பட்டதாக தற்காப்பு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
"கஸக்ஸ் விமானத் தளத்தில் மேம்பட்ட ஜெட் விமானப் பயிற்சியை சிங்கப்பூர் விமானப்படை வீரர்கள் பெறுவதில் தளபதி லவிக்ஞயின் ஆதரவு மிகவும் முக்கியமானது," எனவும் அறிக்கை தெரிவித்தது.
இந்த விருதைப் பெறுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்த தளபதி லவிக்ஞ, தற்காப்புப் படைத் தலைவர் மெல்வின் ஓங், ஆகாயப் படைத் தலைவர் கெல்வின் கோங் ஆகியோரையும் சந்தித்தார்.