தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரெஞ்சு தளபதிக்கு ஆக உயரிய ராணுவ விருது

1 mins read
e94ae362-501d-440f-90db-46bf7d0693d3
பிங்­காட் ஜச கெமி­லாங் (Tentera) எனப்­படும் 'பாராட்­டுக்­கு­ரிய சேவை விருதை (ராணு­வம்) தள­பதி லவிக்ஞ­வுக்கு தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹென் (இடது) நேற்­று தற்­காப்பு அமைச்­சின் தலை­மை­ய­கத்­தில் வழங்­கி­னார். படம்: தற்காப்பு அமைச்சு -

பிரெஞ்சு நாட்டின் ஆகா­ய, விண்­

வெ­ளிப் படை­யின் தலை­வ­ரான தள­பதி ஃபிலிப் லவிக்ஞ சிங்­கப்­பூ­ரின் ஆக மதிப்புமிக்க ராணுவ விரு­தைப் பெற்­றுள்­ளார். சிங்­கப்­பூர், பிரெஞ்சு ஆகா­யப் படை­க­ளுக்கு இடையே உறவை வலுப்­ப­டுத்­தி­ய­தில் அவ­ரது பங்­க­ளிப்­புக்­காக இந்த விருது அவ­ருக்கு வழங்­கப்­பட்­டது.

இந்த விரு­தைத் தள­பதி லவிக்ஞ­வுக்கு வழங்க அதி­பர் ஹலிமா யாக்­கோப் முடிவு எடுத்தார்.

அவ­ரது தலை­மைத்­து­வத்­தின்­கீழ் இரு நாட்டு ஆகா­யப் படை­களும் ஒன்­றி­ணைந்து ஆளில்லா விமா­னம், ஆகாய - நில நட­

வ­டிக்­கை­கள் போன்­றவை மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக தற்­காப்பு அமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்கை தெரி­வித்­தது.

"கஸக்ஸ் விமா­னத் தளத்­தில் மேம்­பட்ட ஜெட் விமானப் பயிற்­சியை சிங்­கப்­பூர் விமா­ன­ப்படை வீரர்­கள் பெறுவதில் தள­பதி லவிக்ஞ­யின் ஆத­ரவு மிக­வும் முக்­கி­ய­மா­னது," என­வும் அறிக்கை தெரி­வித்­தது.

இந்த விரு­தைப் பெறு­வ­தில் மிகுந்த மகிழ்ச்சி அடை­வ­தா­கத் தெரி­வித்த தள­பதி லவிக்ஞ, தற்­காப்­புப் படைத் தலை­வர் மெல்­வின் ஓங், ஆகா­யப் படைத் தலை­வர் கெல்­வின் கோங் ஆகியோரையும் சந்தித்தார்.