நான்காம் தலைமுறைத் தலைவர்களுக்கான பொறுப்பும் கடமையும்

நான்காம் தலைமுறைத் தலைவர்களுக்கான பொறுப்பும் கடமையும்

4 mins read
0cbc5506-38b3-47db-a664-2784d0527611
-

முரசொலி

சிங்கப்பூர் கொவிட்-19 தொற்று பாதிப்புகளில் இருந்து மீண்டு புதிய தெம்புடன் மீள்திறனுடன் இன்னும் வலுவாக எழுச்சிபெற முயற்சிகள் முழுமூச்சாக இடம்பெற்று அதில் படிப்படியாக, சரளமாக வெற்றி கிட்டி வருகிறது.

கொரோனா தொற்று இருந்தாலும் அதற்கு இடையிலும் பொதுத் தேர்தலை நடத்தி முடித்து தனது ஜனநாயகக் கடமையையும் சிங்கப்பூர் நிறைவேற்றி இருக்கிறது. 4ஆம் தலைமுறையின் கைக்கு மாறும் நிலையை எட்டும் அளவுக்கு அரசியலில் நாடு பரிணமித்து உள்ளது.

ஆளும் மக்கள் செயல் கட்சியின் 4ஆம் தலைமுறையைச் சேர்ந்த தலைவர்கள், திரு ஹெங் சுவீ கியட்டை தங்கள் தலைவராகத் தேர்ந்து எடுத்து, அவர் தலைமையின்கீழ் ஒரு குழுவாகச் சேர்ந்து ஒற்றுமைகச் செயல்பட்டு, எடுத்த எடுப்பி லேயே இமாலய சவால்களை எதிர்கொண்டு அவற்றைத் திறம்பட சமாளித்து வருகிறார்கள்.

4ஆம் தலைமுறை இளம் தலைவர்களின் தலைவராக மட்டுமின்றி, அண்மைய பொதுத் தேர்தல் மூலம் மக்களாலும் முழுமைக அங்கீகரிக்கப்பட்ட திரு ஹெங், துணைப் பிரதமர், நிதி அமைச்சர் பொறுப்புகளைத் தன்வசம் எடுத்துக்கொண்டு அடுத்த பிரதமராக பொறுப்பு எடுத்துக்கொள்ள ஆயத்தமாகி வந்தார்.

அரசியலில் இப்படி சரளமாக நடந்துவந்த நிலையில், 4ஆம் தலைமுறைத் தலைவராகத் தொடர்ந்து செயல்படவும் அடுத்த பிரதமராகப் பொறுப்பு எடுத்துக்கொள்ளவும் தான் இயலாத நிலையில் இருப்பதாக திரு ஹெங் அறிவித்தார்.

கொவிட்-19 காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினை கள், நீண்ட காலத்துக்குப் பெரும் சவால்களாக நீடிக்கக்கூடிய நிலை இருப்பதும் தனது வயதும் பிரதமர் என்ற பெரும் பதவிக்கு அவசியமான தேவைகளுமே தான் இந்த முடிவை எடுத்ததற்கான காரணங்கள் என்று திரு ஹெங், 60, அறிவித்து இருக்கிறார்.

இது எதிர்பாராத, வியப்பாக, அரசியல் அதிர்ச்சி கத்தான் இருக்கிறது. பொதுவாக அரசியல் வாரிசு மாற்றம் என்பது எப்போதுமே சரளமாக இருக்கும் என்று சொல்ல முடிது என்றாலும் சிங்கப்பூரைப் பொறுத்தவரை அரசியல் வாரிசு மாற்றம் என்பது திட்டமிடப்பட்டதிலிருந்து இம்மிகூட மாறாமல் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்டபடி இதுவரை நடந்து வந்து உள்ளது.

சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றது முதல் நாட்டை ஆண்டு வரும் மக்கள் செயல் கட்சியின் அரசியல் செயல்பாட்டின்படி, வாரிசு மாற்றம் என்பது உலகமே வியக்கும் வகையில் துல்லியமான, தடுமாற்றம் இல்லாத, நன்கு திட்டமிடப்பட்ட ஒன்றாகவே இடம் பெற்று வந்துள்ளது.

திறம்பட நன்கு திட்டமிடப்பட்ட ஓர் ஏற்பாட்டில் ஒருவரின் சொந்த உடல் நலன், புறச் சூழ்நிலை காரணமாக மாற்றங்கள் இடம்பெற வாய்ப்புகள் உண்டு என்றாலும்கூட, மக்கள் செயல் கட்சி, அரசியல் மாற்றங்கள் பற்றி பகிரங்க அறிவிப்பு விடுத்த பிறகு அதில் மாற்றம், பின்னடைவு இராது என்ற அசைக்க முடித நம்பிக்கை மக்களிடம் உண்டு. ஆகைல் திரு ஹெங்கின் அறிவிப்பு, குறிப்பாக அரசியல் வாரிசு மாற்றம் சரளமாக நடந்து வந்து இருப்பதைக் கண்டு வந்துள்ளவர்களுக்கு இதுவரை இல்லாத, புதியதாக, அதிர்ச்சியாக, வியப்பானதாக இருக்கத்தான் செய்யும்.

இப்போது கொரோனா தொற்று காரணமாக இமாலயச் சவால்களை நாடு எதிர்நோக்குகிறது. நிச்சயமில்லாத நிலையில் பொருளியல் இருந்துவருகிறது. இத்தகைய நிலையில் இடம்பெற்று உள்ள திரு ஹெங்கின் அறிவிப்பு, அடுத்த அரசியல் வாரிசு ர் என்பதை இப்போதைக்கு நிச்சயமாக சொல்ல இயலாத நிலையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இது நாட்டுக்கு, சிங்கப்பூரர்களுக்கு மேலும் ஒரு சவாலாக, சங்கடமாக, பின்னடைவாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

குறிப்பாக 4ஆம் தலைமுறை இளம் தலைவர்களுக்கு அவசர அவசியமான ஒரு கடமையை, பொறுப்பைத் திறம்பட நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தையும் அது ஏற்படுத்தி இருக்கிறது.

இத்தலைவர்கள், திரு ஹெங்கைவிட இளமை ன ஒருவரை தங்கள் தலைவராகத் தேர்ந்து எடுத்து, அவர் நீண்ட காலம் அனுபவம் பெற்று அதற்குப் பிறகு பிரதமர் பொறுப்பை ஏற்கவேண்டிய ஒரு நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட ஒரு பின்னடைவு இருந்தாலும் எல்லாம் வழக்கம் போல் நடந்துவரும்; திரு லீ சியன் லூங் பிரதமராகவும் திரு ஹெங் துணைப் பிரதமராகவும் தொடர்வர். இப்போதைய அதே குழு தொடர்ந்து பொறுப்பில் இருந்து வரும்; சிங்கப்பூரின் கொள்கை, கோட்பாடுகளில் மாற்றம் இராது;

அதேபோல் வெளிநாடுகளுடன், முதலீட்டாளர்களுடன் கூடிய உறவுகள், தொடர்புகள், செயல்பாடுகளிலும் அரசியல், அமைப்புமுறை மாற்றங்கள் இருக்காது; எல்லாம் வழக்கம்போல் சரளமாக நடந்து வரும் என்று அறிவிக்கப்பட்டு மக்களுக்கு உறுதி தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நாடுகளைப் பார்க்கையில், பொறுப்புக்கு வரும் தலைவர்களைப் பொறுத்து குறிப்பிட்ட கொள்கைகள் நடப்புக்கு வரக்கூடிய ஒரு நிலையைக் காண முடியும். அத்தகைய சூழலில் அமைச்சரவையில் அதிகார சமநிலை மாறும்போது அல்லது அரசியல் அடுத்த வாரிசு என்று வரும்போது நிச்சயமில்லாத ஒரு நிலை ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

ஆனால் சிங்கப்பூரின் அரசியல், அரசாங்க, அமைச்சரவை நிர்வாக முறை வேறுபட்ட ஒன்றாகும். இங்கு அமைச்சரவை ஒரே குழுவாகச் செயல்படுகிறது. குறிப்பிட்ட நோக்கத்திற்காக அது குரல் கொடுக்கிறது, பாடுபடுகிறது. இந்த அணுகுமுறையும் மாறாது என்று திட்டவட்டமாக நம்பலாம்.

அரசியல் வாரிசு மாற்றம் என்பது எந்த பிரச்சினையும் இன்றி இதுநாள் வரை இங்கு நடந்து வந்து உள்ளது. இதையே 4ஆம் தலைமுறைத் தலைவர்களும் தொடர்ந்து சாதிப்பார்கள் என்பதே நாட்டின், மக்களின் நம்பிக்கை, எதிர்பார்ப்பு.

ஆளுமைப் பணியில் ஒருமித்த கவனம் செலுத்து வதோடு, ஒற்றுமைகச் செயல்பட்டு தங்களுக்கு ஒரு தலைவரைத் தேர்ந்து எடுத்து, அவரின் தலைமைத்துவத்தின் கீழ் ஐக்கியமாக, உறுதிக செயல்பட வேண்டிய அவசியத்தை, கட்டாயத்தை 4ஆம் தலைமுறைத் தலைவர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.

இந்தப் பொறுப்பை குறித்த காலத்தில் செவ்வனே நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தினால் மக்கள் தங்கள் மேல் கொண்டுள்ள நம்பிக்கை மங்கிவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது என்பதை இளம் தலைவர்கள் மறந்துவிடக்கூடாது.