கொவிட்-19 முடக்கம் உணவு விநியோகச் சேவைக்கு ஊக்கம்

கொவிட்-19 முடக்கம் உணவு விநியோகச் சேவைக்கு ஊக்கம்

1 mins read
3676f7a7-3784-460e-9351-d8df4d07e139
-

கொவிட்-19 காரணமாக சென்ற ஆண்டில் பொருளியல் முடக்கம் அறிவிக்கப்பட்டு ஓராண்டு ஓடிவிட்டது. முடக்கம் நடப்பில் இருந்தபோது பிறந்தநாள் கொண்டாட்டங்கள், ஆண்டுவிழா போன்றவற்றை வீடுகளில்தான் சிறிய அளவில் கொண்டாட முடிந்தது.

உணவை வீடுகள் உள்ளிட்ட இடங்களுக்கு கொண்டு கொடுக்கும் விநியோகச் சேவைக்குத் தேவை அதிகமானதால் தொடக்கத்தில் உணவகங்கள் போதிய அளவுக்கு வாகன ஓட்டுநர்களை வேலையில் அமர்த்த முடியாமல் திண்டாடின.

பல தருவிப்பு ஆணைகளை அவை ரத்து செய்துவிட்டன. கடந்த ஓராண்டு காலத்தில் உணவு விநியோகச் சேவை தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

உணவு விநியோகச் சேவையில் ஈடுபட்டு இருக்கும் டெலிவரோ, கிராப் உள்ளிட்ட பல நிறுவனங்களும் சென்ற ஆண்டில் முக்கிய விடுமுறை நாட்களின்போது தங்களுக்கு தருவிப்பு ஆணைகள் அதிகமாகக் கிடைத்ததாகக் கூறின.