தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள் பத்தில் ஏழுக்கும் அதிகமானோர் கொவிட்-19 முதலாவது தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.
கிட்டத்தட்ட பாதிப்பேர், இரண்டாவது தடுப்பூசியையும் போட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தாமாகவே முன்வந்த ஓட்டுநர்
களுக்குத் தமது பேஸ்புக் பதிவில் நேற்று நன்றி தெரிவித்த போக்கு வரத்து அமைச்சர் ஓங் யி காங், இந்தத் தகவலையும் பகிர்ந்துள்ளார்.
போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் நேற்று வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், தற்போது ஓட்டுநர்களாகச் செயல்பட்டு வரும் டாக்சி மற்றும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்களில் கிட்டத்தட்ட 85 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்திருப்பது
ஊக்கமளிப்பதாகக் குறிப்பிட்டார்.
ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான ஓட்டுநர்களில் ஏறத்தாழ 40,000 பேர் முதலாவது தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும் 25,000க்கும் அதிகமானோர் இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"இது ஓட்டுநர்களுக்கு கூடுதல் மன அமைதியைக் கொடுப்பதுடன், அவர்களையும் அவர்களது குடும்பத்தார் மற்றும் பயணிகளையும் கொவிட்-19லிருந்து பாதுகாக்க உதவும்," என்றும் அவர் கூறியுள்ளார்.
எஞ்சியுள்ள ஓட்டுநர்களும் விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருவர் என நம்பு
வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டாக்சி மற்றும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுக்குத் தடுப்பூசி போடும் பணி பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி தொடங்கியது.
எண்பதாயிரத்துக்கும் அதிகமான நிலப் போக்குவரத்துப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடும் திட்டத்தின் ஓர் அங்கமாக இது அமைந்தது.
தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்துகொள்வதற்கான தனிப்பட்ட இணைப்பைக் கொண்ட குறுந்தகவல்கள் தகுதிபெறும் ஓட்டு நர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
நிலப் போக்குவரத்து ஆணையம், சுகாதார அமைச்சு ஆகியவற்றின் முயற்சியில், தேசிய டாக்சி நடத்துநர் சங்கம், தேசிய தனியார் வாடகை வாகன உரிமையாளர் சங்கம், டாக்சி மற்றும் தனியார் வாடகை கார் நடத்துநர்கள் ஆகியோரின் ஆதரவுடன் இந்த நட
வடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இம்மாதம் 6ஆம் தேதி நிலவரப்படி 1.1 மில்லியனுக்கும் அதிகமானோர் முதலாவது தடுப்பூசி போட்டுக்கொண்டனர். 535,000 பேருக்கு இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

