ஜாலான் புசார் வட்டாரத்தில் இருக்கும் குழந்தைகளுக்குப் பயன்படும் விதத்தில் கட்டுப்படியாகக்கூடிய கட்டணத்திலான செறிவூட்டல் நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கிளைஃப் எனும் சமூக நிறுவனம் அந்த நடவடிக்கைகள் இடம்பெறும் நிலையத்தை பீச் ரோட்டில் திறந்துள்ளது.
பயிற்சி வகுப்புகள், வெளிப்புற நடவடிக்கைகள் போன்றவை அந்த நிலையத்தால் நடத்தப்படும்.
நிலையத்தின் திறப்பு நிகழ்வில் பேசிய தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, பிள்ளை வளர்ப்பில் பெற்றோருக்கு நிலையம் உதவும் என நம்பிக்கை தெரிவித்தார்.
"பெற்றோர் வேலை உட்பட பல்வேறு சவால்களை எதிர்நோக்குவதால், குடும்பங்களுக்கு ஆதரவளித்து, பிள்ளைகளுக்கு உதவும் விதத்தில் பிள்ளைகளை நல்லபடியாக கவனித்துக்கொள்வதை உறுதி செய்திருக்கிறோம்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கிய அந்த சமூக நிறுவனம், தற்போது 5 முதல் 16 வயது வரையிலான 1,700க்கும் அதிகமான பிள்ளைகளுக்கு சேவை வழங்குகிறது. பூன்லே, மார்சிலிங் ஆகிய இடங்களில் கிளைகளைக் கொண்டுள்ள கிளைஃப் நிறுவனம் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுடன் கைகோத்து, தலைமைத்துவம், குழு செயல்பாடு போன்ற திறன்களை சுற்றுலா, மலையேற்றம், பாறை ஏற்றம் போன்ற வெளிப்புற நடவடிக்கைகள் மூலம் மேம்படுத்து கிறது.
சமூக உணர்வுபூர்வக் கல்வி கணினியியல் வகுப்புகளை நடத்து இந்த நிலையங்களில் மாதாந்திர உறுப்பினர் கட்டணம் $20 மட்டுமே.

