சிங்கப்பூரில் நேற்று ஒருவர் சமூக அளவில் கொவிட்-19 தொற்றியதாக உறுதி செய்யப்பட்டது. அவர் குறுகிய கால வருகை அட்டையின் கீழ் சிங்கப்பூருக்கு வந்த 71 வயது இந்தியப் பெண். நேற்று பதிவான 32 புதிய சம்பவங்களுடன் சேர்த்து சிங்கப்பூரின் மொத்த கிருமித்தொற்றுச் சம்பவ எண்ணிக்கை 60, 633ஆகப் பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட மற்ற 31 பேர் வீட்டில் தங்கும் உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
61768 ஆவது சம்பவமான அந்தப் பெண், டிசம்பர் 28ஆம் தேதி இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தார். ஜனவரி 10ஆம் தேதி வரை தங்குமிட வசதி ஒன்றில் இவர் தமக்குக் கொடுக்கப்பட்ட வீட்டில் தங்கும் உத்தரவை நிறைவேற்றினார்.
வீட்டில் தங்கும் உத்தரவு காலக்கட்டத்தில் சோதிக்கப்பட்டபோது அவருக்கு கிருமித்தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்தப் பெண் சிங்கப்பூருக்கு வந்த விமானத்தில், சம்பவங்கள் 59169 மற்றும் 59173 சம்பவங்களுடன் இவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டதால் ஜனவரி 10 ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை இருந்தார்.
கடந்த திங்கட்கிழமையன்று (ஏப்ரல் 5ஆம் தேதி) அந்தப் பெண் காய்ச்சலுக்குள்ளானார். மருத்துவ சிகிச்சைக்காக அவர் அடுத்த நாள் நாடியபோது அவருக்கு கொவிட்-19 இருந்தது உறுதி செய்யப்பட்டது. கடந்த வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 8ஆம் தேதி) அவருக்கு கொவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் தேசிய தொற்றுநோய் நிலையத்திற்கு அனுப்பப்பட்டார்.

