புனித ரமதான் மாதத்தை வரவேற்கும் ஒளியூட்டு

ரமதான் மாதத்தின் தொடக்கத்தைக் கொண்டாட கம்போங் கிளாம் வட்டாரம்  வண்ண விளக்குகளால் ஒளியூட்டப்பட்டது.

7 மணி முதல் சுமார் 5 மணி நேரத்திற்கு நார்த் பிரிட்ஜ் ரோடு, அரபு ஸ்திரீட், கண்டகார் ஸ்திரீட், பாக்தாத் ஸ்ட்ரீட் மற்றும் புசோரா ஸ்திரீட் உள்ளிட்ட சாலைகளில் விளக்குகள் மே 12ஆம் தேதிவரை மின்னும்.

‘ஒன் கம்போங் கிளாம்’மின் ஏற்பாட்டில் நடைபெறும் ஒருமாத இயக்கத்தின் முதல் நிகழ்வாக இது உள்ளது.

சுல்தான் பள்ளிவாசலில் கம்போங் கிளாமின் செழுமையான வரலாற்றையும் கலாசாரத்தையும் காண்பிக்கும் வண்ண விளக்கு நிகழ்ச்சிகள் இந்தக் காலக்கட்டத்தின்போது நடைபெறும்.

மலாய் மரபுடைமை நிலையத்தில் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, இந்த இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். சுகாதாரத்திற்கான நாடாளுமன்ற செயலாளர் ரஹாயு மசாம் மற்றும் ஜலான் புசார் குழுத்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் வான் ரிசால் வான் சக்காரியா ஆகியோர் இவருடன் கலந்துகொண்டனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!