தொல்பொருள் ஆய்வாளர்கள் எகிப்தின் ஆகப் பெரிய நகரைக் கண்டுபிடித்துள்ளனர். லக்ஸோர் நகருக்கு அருகே இந்நகரம் 3,000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.
பழம்பெரும் எகிப்திய தெய்வமான எட்டோன் மற்றும் மன்னன் மூன்றாம் அமென்கொட்டேப் ஆகியோருடன் இந்த நகர் தொடர்புடையது என்று எகிப்திய வரலாற்று நிபுணர் சாகி ஹவாஸ்(check) செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்நகரில் மூன்று வட்டாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிர்வாகம், தொழில்துறை, ஊழியர்கள் இருப்பிடம் ஆகியவற்றுக்காக இவை அமைக்கப்பட்டன.
மாமிசத்தைக் காய வைப்பதற்கான பட்டறை, துணிகளையும் செருப்புகளையும் உருவாக்குதல், கைவினைப் பொருட்களை உருவாக்குதல் ஆகியவற்றுக்கான இடங்கள் இருந்தது தெரிய வந்தது.

