ஆரோக்கிய உணவு இயக்கம்

ஆரோக்கிய உணவு இயக்கம்

2 mins read
ca1f5907-557e-4a0f-834b-f8aae2a761c3
-

ரம­லான் மாதம் தொடங்க இருப்­பதை முன்­னிட்டு, மலாய்/முஸ்­லிம் சமூ­கத்­தி­ன­ரி­டையே ஆரோக்­கி­ய­மான உணவு, வாழ்க்கை முறையை மேம்­ப­டுத்­தும் இயக்­கம் நேற்று தொடங்­கப்­பட்­டது.

இந்த இரண்டு மாத கால இயக்­கத்­தின்­போது, நோன்பு மாதத்­தி­லும் மே 13 அன்று வரும் நோன்­புப் பெரு­நா­ளின்­போ­தும் குறைந்த சர்க்­க­ரை­யை­யும் ஆரோக்­கி­ய­மான உண­வுத் தேர்­வை­யும் ​​சுகா­தார மேம்­பாட்டு வாரி­யம் (ஹெச்­பிபி) ஊக்­கு­விக்­கும்.

சமூக பங்­கா­ளி­க­ளு­டன் இணைந்து புகைப்­ப­ழக்­கத்தைக் கைவிட­வும் மக்­களை வாரி­யம் ஊக்­கு­விக்­கும்.

இணை­யத்­தி­லும் பொது­வா­வும் நடை­பெ­ற­வுள்ள இனிப்­பைக் குறைக்­கும் இந்த இயக்­கத்தை நேற்று தொடங்­கி­வைத்த சுகா­தா­ரத்­துக்­கான நாடா­ளு­மன்­றச் செய­லா­ள­ரான ரஹாயு மஹாம், கொவிட்-19 தொற்­று­நோய் பர­வல் முன்­வைத்­துள்ள சவால்­க­ளைச் சமா­ளிப்­ப­தில் சமூ­கத்­தின் மீள்­திறனைக் குறிப்­பிட்­டார்.

"குடும்­ப­மும் ஆரோக்­கி­ய­மும் எங்­க­ளுக்கு முக்­கி­ய­மான விஷ­யங்­கள் என்­பதை தொற்­று­நோய் பர­வ­லின்­போது உணர்ந்­தோம்.

"இந்த ரம­லான் மாத­மும் நோன்புப் பெரு­நா­ளும் எண்­ணிப் பார்ப்­ப­தற்­கான, கொண்­டாட்­டத்­திற்­கான, குடும்­பத்­து­டன் இருப்­ப­தற்­கான நேரம். ஆரோக்­கி­ய­மான பழக்­கங்­களை உரு­வாக்­கு­தி­லும் நாங்­கள் ஒன்­றி­ணைந்து செயல்­பட முடி­யும் என்று நம்­பு­கி­றேன். மலாய்/முஸ்­லிம் சமூ­கம் இதைப் பின்பற்றும் என்று நான் நம்­பு­கி­றேன்," என்­றார் அவர்.

புஸ்­ஸோரா சாலை­யில் உள்ள மலா­யன் கவுன்­சில் உண­வ­கத்­தில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு அவர் பேசி­னார்.

இந்த ஆண்­டின் தொடக்­கத்­தில், மலாய் இனத்­தி­ன­ரிடையே நீரி­ழிவு நோயா­ளி­க­ளின் ஒட்­டு­மொத்த விழுக்­காடு கடந்த மூன்று ஆண்டுகளில் அதி­க­ரித்­துள்­ளது. 11.6 விழுக்­காட்­டி­லி­ருந்து 2020ஆம் ஆண்­டில் 14.4 விழுக்­கா­டாக உயர்ந்துள்­ளது என்று திரு­மதி ரஹாயு குறிப்­பிட்­டார்.

பிர­தான ஊடகங்­கள், சமூக ஊட­கங்­கள் வழி­யாக சுகாதார மேம்பாட்டு வாரி­யம் இந்த இயக்­கத்தை சமூ­கத்­தி­டம் எடுத்துச் செல்­லும்.

மேலும், மலாய் / முஸ்­லிம் அமைப்­பு­கள், பள்­ளி­வா­சல்­க­ளு­ட­னும் இணைந்து புகைப் பழக்­கத்தை நிறுத்­தி­ய­வர்­க­ள் பங்கேற்கும் மெய்­நி­கர் உரை­க­ளை­யும் நடத்­தும்.

அவர்­கள் புகைப்பதை கைவிடுவது குறித்த தங்­களது அனு­ப­வங்களைப் பகிர்ந்­து­கொள்­வ­தோடு, புகை இல்­லாத வாழ்க்கை முறை குறித்த உத­விக்­கு­றிப்­பு­க­ளை­யும், ஆத­ர­வான சூழலை உருவாக்க குடும்ப உறுப்­பி­னர்­கள் ஆற்­றக்­கூ­டிய பங்­கை­யும் வழங்­கு­வார்­கள்.

புகை பழக்­கத்தை விட விரும்­பு­வோர் 28-நாள் திட்­டத்­திற்கு healthhub.sg/korangok வழி­யாக பதிவு செய்­ய­லாம்.

ரம­லான் மாதத்­தில் சுமார் 5,500 வீடு­க­ளுக்கு இனிப்பு குறைந்த பானங்­கள், பழுப்பு அரிசி, பழுப்பு அரிசி சேமியா, ஆரோக்­கி­ய­மான எண்­ணெய், ஆரோக்­கி­ய­மான சிற்­றுண்­டி­கள் அடங்­கிய அன்­ப­ளிப்­புப் பைக­ளை­யும் 'தபுங் அமல் ஐடில்­ஃபிட்ரி' அற நிதியம், ஜூரோங், தெம்பனிஸ், உட்லண்ட்ஸ் ஆகிய இடங்களில் உள்ள எம்3@நக­ரங்­கள் ஆகிய பங்­கா­ளி­க­ளு­டன் இணைந்து வாரி­யம் விநி­யோ­கிக்­க­வுள்­ளது.