வழக்கறிஞராகத் தொழில் செய்வதற்கு அனுமதி கோரும் மனு சாதாரணமாக எவ்வித சிக்கலும் இல்லாதது. ஆனால், இதுபோன்ற மனு ஒன்றை விசாரித்த உயர்நீதி மன்றம், இந்த மனுவை விரைவாகவும் ஆழமாகவும் விசாரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
திரு கோ ஹவ் டெங் என்பவருக்கு வழக்கறிஞர் பயிற்சி அளித்து அவரைக் கண்காணிக்கும் பொறுப்பை திரு டான் ஜே யாவ் ஏற்றுக்கொண்டார்.
ஆனால், இதில் ஒரு திருப்புமுனையாக திரு கோ வழக்கறிஞராகத் தொழில்புரிவதற்கு செய்த மனுவுக்கு அவர் ஆட்சேபணை தெரிவித்தார்.
திரு கோ தன் நிறுவனத்தில் வேலை பார்த்த பெரும்பாலான நேரங்களில் கணினி விளையாட்டில் ஈடுபட்டும் படங்களைப் பார்த்தும் பொழுதைப் போக்கியதாக திரு டான் தெரிவித்திருந்தார்.
இந்தப் பிரச்சினையில் மற்றொரு திருப்புமுனையாக, புதிதாக வழக்கறிஞராகப் பணிபுரிய வரும் சட்டப் பட்டதாரிகளுக்குப் பயிற்சி வழங்கும் அளவுக்கு திரு டானுக்குத் தகுதி இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, உயர்நீதி மன்றம் தனது தீர்ப்பில் புதிய வழக்கறிஞருக்கு எதிராக திரு டான் கூறியுள்ள புகார்கள் உண்மைதானா என்றும், இதற்கு முன்னர் வேறு சட்ட பட்டதாரிகளில் எவரும் இவரிடம் பயிற்சி பெற்று வழக்கீல் தொழில்புரிய அனுமதிக்கப்பட்டுள்ளனரா என்று விசாரிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
"வக்கீல் தொழில் புரிவதற்கான மனு ஒன்றில் கேள்விகள் எழுந்துள்ளது விசித்திரமானது. மேலும், இதற்கான விடைகள் மிகவும் குறைவாகவே உள்ளது," என்றார் நீதிபதி திரு சூ ஹான் டெக்.
ஆண்டுதோறும் குறைந்தது இதுபோன்ற 100 விண்ணப்பங்கள் வருவதுண்டு. அவை எல்லாமே எவ்வித சிக்கலுமின்றி ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.