தங்குவிடுதியில் ஒருவர் உட்பட 20 பேருக்குத் தொற்று

தங்குவிடுதியில் ஒருவர் உட்பட 20 பேருக்குத் தொற்று

2 mins read
acce90cb-0cbb-4a31-9015-abd55f8565ab
-

சிங்­கப்­பூ­ரில் நேற்று புதி­தாக 20 பேருக்கு கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. இவற்­றோடு சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கிருமி பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 60, 653க்கு உயர்ந்­துள்­ளது.

புதி­தாக பாதிக்­கப்­பட்­டோ­ரில் ஒரு­வர் ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­யைச் சேர்ந்­த­வர். இதற்கு முன் ஆறு வாரங்­க­ளுக்கு முன்­ன­தாக பிப்­ர­வரி 28ஆம் தேதி­யன்று வெளி­நாட்டு ஊழி­யர் தங்கு விடு­தி­யில் கிரு­மித்­தொற்று பதி­வா­னது.

எஞ்­சிய 19 பேர் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வந்­த­வர்­கள். அவர்­கள் சிங்­கப்­பூர் வந்­த­வு­டன் வீட்­டி­லேயே இருப்­ப­தற்­கான உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது என்று சுகா­தார அமைச்சு வெளி­யிட்­டுள்ள அறிக்கை தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே, நேற்று முன்­தி­னம் ஒரு­வ­ருக்கு சமூக அள­வில் கொவிட்-19 தொற்­றி­ய­தாக உறுதி செய்­யப்­பட்­டது.

குறு­கிய கால வருகை அட்­டை­யின் கீழ் சிங்­கப்­பூ­ருக்கு வந்த 71 வயது இந்­தி­யப் பெண்­ணான அவர், டிசம்­பர் 28ஆம் தேதி இந்­தி­யா­வி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்­தார். ஜன­வரி 10ஆம் தேதி வரை தங்­கு­மிட வசதி ஒன்­றில் இவர் வீட்­டி­லேயே தங்­கி­யி­ருக்­கும் உத்­த­ரவை நிறை­வேற்­றி­னார்.

வீட்­டி­லேயே தங்­கி­யி­ருக்­கும் உத்­த­ரவை நிறை­வேற்­றிய கால­கட்­டத்­தில் ஜன­வரி 8ஆம் தேதி சோதிக்­கப்­பட்­ட­போது அவ­ருக்­குக் கிரு­மித்­தொற்று இல்லை என உறுதி செய்­யப்­பட்­டி­ருந்­தது.

ஏப்­ரல் 5ஆம் தேதி அந்த மாதுக்கு காய்ச்­சல் ஏற்­பட்­டது. மறு­நாள் அவர் மருத்­துவ சோத­னைச் சென்­ற­போது அவ­ருக்கு கோவிட்-19 சோதனை மேற்­கொள்­ளப்­பட்­டது.

ஏப்­ரல் 8ஆம் தேதி அவ­ருக்கு கொவிட்-19 இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டதை அடுத்து அவர் தேசிய தொற்­று­நோய் நிலை­யத்­திற்கு அனுப்­பப்­பட்­டார். தேசிய பொது சுகா­தார ஆய்­வுக்­கூ­டம் சென்ற வெள்­ளிக்­கி­ழமை மேற்­கொண்ட சோத­னை­யில் அவ­ருக்கு கிரு­மித்­தொற்று இல்லை என வந்­தது. மேற்­கொண்டு செய்­யப்­பட்ட ஊநீரி­யல் சோத­னை­யில் தொற்று இருப்­பது உறு­தி­யா­னது.