ரஹ்மான்: இந்திய கலை, கலாசாரத்தை உச்சத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும்

3 mins read
e29c2437-d35e-4e23-8570-e472f0c0dd09
இணையம் வழி நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். படம்: தமிழ் முரசு -

எஸ்.வெங்­க­டேஷ்­வ­ரன்

இந்­திய கலை­க­ளை­யும் கலா­சா­ரத்­தை­யும் உல­க­ளா­விய நிலைக்கு உயர்த்த இன்­னும் முயற்­சி­கள் எடுக்­கப்­பட வேண்­டும். இந்­திய கலா­சாரம் முதல் பரி­மா­ணத்­தி­லேயே உள்­ளது. இதனை இரண்­டாம் பரி­மா­ணத்­திற்கு உயர்த்தி, உலகமே உள்­வாங்கி பின்­பற்­றும் பிர­பல கலா­சா­ர­மாக்க முடி­யும் என்று பிர­பல இசைக்­க­லை­ஞர் ஏ. ஆர். ரஹ்­மான் தெரி­வித்­துள்­ளார்.

சில நேரங்­களில், வட்­டார கலா­சா­ரங்­களில் கவ­னம் செலுத்­து­வது அனைத்­து­லக அள­விற்கு கலையைக் கொண்டு செல்ல வழி­வகுக்­கும்.

இன்று உல­கெங்­கும் ஒலிக்­கும் 'எஞ்­சோய் எஞ்­சாமி' பாடல் இதற்கு மிகச் சிறந்த உதா­ர­ணம் என்று கூறி­னார் அவர்.

தனிப்­பட்ட கலை­ஞர்­க­ளுக்கு வாய்ப்பை ஏற்­ப­டுத்­தித் தர உரு­வாக்­கப்­பட்­டுள்ள ரஹ்­மா­னின் 'மஜா' இசை வெளி­யீட்­டுத் தளத்­தில் வெளி­யீடு கண்­டி­ருக்­கும் முதல் பாடல் இது.

சமூ­க­மாக ஒன்­றி­ணைந்­தால் அழ­கான படைப்­பு­களை உரு­வாக்க முடி­யும் என்­ப­தற்கு இசை­ய­மைப்­பா­ளர் சந்­தோஷ் நாரா­ய­ணன், பாட­கர்­கள் தீ, அறிவு ஆகி­யோர் உருவாக்­கி உள்ள இந்­தப் பாடல் ஓர் எடுத்­துக்­காட்டு என்­றார் திரு ரஹ்­மான்.

இந்த இலக்­கில் மற்­றொரு முயற்­சி­யாக, ரஹ்­மான் முதன் முத­லில் திரைக்­கதை எழுதி, தயா­ரித்து இசை­ய­மைத்­துள்ள '99 சாங்ஸ்' திரைப்­பட வெளி­யீடு குறித்த நேற்று மெய்­நி­கர் வழி நடந்த செய்­தி­யாளர் கூட்­டத்­தில் திரு ரஹ்­மான் பேசி­னார்.

'சோனி மியூ­சிக்' ஏற்­பாடு செய்த நிகழ்ச்­சி­யில் சிங்­கப்­பூர், மலே­சிய ஊட­கங்­கள் பங்­கு­பெற்­றன.

'99 சாங்ஸ்' படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மும்­மொ­ழி­களில் ஏப்­ரல் 16ஆம் தேதி வெளி­யீடு காண்­கிறது.

புது நடி­கர்­கள், புது பாட­கர்­கள், புது கலை உத்­தி­கள் என்ற பல புது அம்­சங்­களை உள்­ள­டக்­கு­வ­தால் படத்­த­யா­ரிப்­பில் தாம­தம் ஏற்­பட்­டது என்று அவர் விளக்­கி­னார்.

"இளங்­கன்று பயம் அறி­யாது என்­பதுபோல, வழக்­க­மான திரைப்­பட தயா­ரிப்பு முறை­கள் பற்றி அறியா­த­தால் ஒரு துணிச்­ச­லான உணர்வு வந்­தது. திரைப்பட உருவாக்கத்தில் நிறைய சுதந்திரம் இருந்ததால் அதை முறையாக தயாரிக்க காலம் எடுத்தது.

எனினும், திரைப்­ப­டத்­தின் முன்­னோட்ட காணொ­ளி­யும் பாடல்­களும் மக்­க­ளி­டம் வர­வேற்­பைப் பெற்­றுள்­ளது. மக்கள் நல்லாதரவை அளித்துள்ளனர்," என்­று மகிழ்ச்சி யுடன் கூறினார் திரு ரஹ்­மான்.

ஒரு வேறு­பட்ட கலை வடி­விற்கு இப்­ப­டம் அடித்­த­ள­மாக அமை­யும் என்­றும் குறிப்­பிட்­டார் அவர்.

ரஹ்­மா­னு­டன் இணைந்து திரைக்­க­தையை எழு­தி­யி­ருக்­கும் படத்­தின் இயக்­கு­ந­ரான திரு விஷ்­வேஷ் கிருஷ்­ண­மூர்த்­தி­யும் இந்த நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­டார்.

"அனை­வ­ரை­யும் படைப்­பில் சம­மான பங்­கா­ளி­யாக ஈடு­ப­டுத்த திரு ரஹ்­மான் முயற்சி எடுப்­பார். கலை வடி­வத்தை அச்­ச­மில்­லா­மல் வெளிப்­ப­டுத்த உகந்த சூழலை உரு­வாக்­கு­வார். அதே நேரத்­தில் படைப்­பு தர­மாக இருக்க வேண்டும் என்பதில் உறு­தி­யாக இருப்­பார்," என்­றார் திரு விஷ்வேஷ்.

சிங்­கப்­பூ­ருக்கு முதன் முத­லாக வந்த அனு­ப­வத்தை நினை­வு­கூர்ந்த திரு ரஹ்­மான் சிங்­கப்­பூ­ரின் சுத்தம், சுகா­தா­ரத்­தைப் பார்த்து "இது­தான் சொர்க்­கமா" என்று வியந்துபோன­தா­க­வும் இந்­திய கலா­சா­ரம் இனி­மேல் எதை நோக்­கிச் செல்ல வேண்டும் என்ற தெளிவு அப்­போது கிடைத்­த­தா­க­வும் கூறி­னார்.

"அழகு என்­பது கட­வு­ளின் ஓர் அம்­சம். அழகு என்­பது மனித இனத்­தின் ஓர் அம்­சம்," என்ற திரு ரஹ்­மான், மக்­கள் ஒன்­றி­ணைந்து செயல்­பட்­டால் அது பல நிலை­களில் ஆக்­க­பூர்­வ­மான தாக்­கத்தை உண்­டாக்­கும் என்­றார்.