என்யுஎஸ் மாணவர் நீக்கம்

என்யுஎஸ் மாணவர் நீக்கம்

1 mins read
1a563e00-adfe-49e3-b355-e8a28a75e52e
பாலியல் ரீதியான தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட நான்காம் ஆண்டு பட்டக் கல்வி மாணவர் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டதாக கடந்த மாதம் 29ஆம் தேதி இன்ட்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இரு மாணவிகளுடன் வெவ்வேறு நேரங்களில் பாலியல் உறவு கொண்டபோது அப்பெண்களின் சம்மதம் இல்லாமல் அதைக் காணொளி எடுத்த மாணவர் ஒருவர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்திலிருந்து (என்யுஎஸ்) நீக்கப்பட்டுள்ளார்.

அவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக கலந்துரையாடி முடிவெடுக்க பல்கலைக்கழகத்தின் ஒழுங்குமுறை சபை ஒன்று கடந்த பிப்ரவரி மாதம் கூடியதாக பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

பாலியல் ரீதியான தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட நான்காம் ஆண்டு பட்டக் கல்வி மாணவர் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டதாக கடந்த மாதம் 29ஆம் தேதி இன்ட்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டது.

குற்றம் சுமத்தப்பட்ட அந்த மாணவர் பிரின்ஸ் ஜார்ஜஸ் பார்க் ரெசிடன்சஸ் மாணவர் விடுதியில் மாணவர் தலைவராக இருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு எதிராக புகார் செய்யப்பட்டதை அடுத்து அவர் அந்த விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
என்யுஎஸ்மாணவர்