அவசர நேரத்தில் கர்ப்பிணிக்கு உதவிய தெம்பனிஸ் எம்ஆர்டி நிலைய பணியாளர்கள்

அவசர நேரத்தில் கர்ப்பிணிக்கு உதவிய தெம்பனிஸ் எம்ஆர்டி நிலைய பணியாளர்கள்

1 mins read
5e8568cb-40d6-41db-b2d9-9e770b644fbe
தெம்பனிஸ் எம்ஆர்டி நிலைய மேலாளர் ஆலன் லிம் (இடமிருந்து மூன்றாவது), நிலையத்தின் மூத்த துணை மேலாளரான திரு ஜஹபர் சஹிபப்பா ஆகியோர் திருவாட்டி சித்தியின் இல்லத்துக்குச் சென்று குழந்தையைப் பார்த்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தெம்பனிஸ் எம்ஆர்டி நிலையத்தில் கடந்த மாதம் 13ஆம் தேதி தம்முடைய 63 வயது தாயாருடன் ரயிலுக்காகக் காத்துக்கொண்டிருந்தார் 27 வயதான திருமதி சித்தி ரொஹானிஸா முஹம்மது.

தமது கால்களின் வழியே திடீரென ரத்தம் வழிந்தோடியதைக் கண்டதும் பிரச்சினையைப் புரிந்துகொண்ட அவருக்கு, தம் கருவிலிருந்த குழந்தையைப் பற்றிய கவலை மேலோங்கியது. கர்ப்பிணியான திருமதி சித்திக்கு ரத்தச்சோகை மற்றும் நஞ்சுக்கொடி பிரச்சினை இருந்தது முந்தைய கர்ப்பகாலத்தின்போது அவருக்கு தெரிய வந்தது.

இப்போது மீண்டும் இப்பிரச்சினை உடனே ரயில் நிலைய அதிகாரிகளின் உதவியை நாடினார் திருமதி சித்தியின் தாயார் திருவாட்டி ரோஸ்னா இத்தாம்.

தகவல் கிடைத்ததும் அவசர மருத்துவ வாகனத்தை வரவழைத்து திருமதி சித்தியை பத்திரமாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் ரயில் நிலைய அதிகாரிகள்.

அதுவரை திருமதி சித்தியையும் அவரது தாயாரையும் பதற்றமின்றி பார்த்துக்கொள்ளவும் ரயில் நிலைய பணியாளர்கள் உதவினார்கள்.

குழந்தையையும் திருமதி சித்தியையும் பார்க்க இந்த மாதம் 8ஆம் தேதி அவரது வீட்டுக்குச் சென்ற சென்ற ரயில் நிலைய அதிகாரிகளை திருவாட்டி ரோஸ்னா உபசரித்தார்.

குறைமாதப் பிரசவம் என்பதால் குழந்தை சற்று சிறியதாக இருந்தாலும் ஆரோக்கியமாக உள்ளது.

இதுபோல சிக்கலான சூழல்களை எதிர்கொள்ள அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார் தெம்பனிஸ் எம்ஆர்டி நிலைய மேலாளர் ஆலன் லிம்.

குறிப்புச் சொற்கள்